அமீர்கான் விஜய் சேதுபதி இணையும் லால் சிங் சத்தா - பொற்கோவிலில் பிரார்த்தனை

சென்னை: லால் சிங் சத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 4ஆம் தேதி துவங்க இருக்கும் வேலையில் அமீர் கான் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் வாகேகுருவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று குருவை தரிசித்து வேண்டிக்கொண்டுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியும் அமீர் கானுடன் இணைந்து இப்படத்தில் நடிக்க போகிறார்.

வையாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் அமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதுல் குல்கர்னி எழுதிய லால் சிங் சத்தா எனும் பாலிவுட் திரைப்படத்தை இயக்கவுள்ளார் அத்வைத் சந்தன். 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஃபாரெஸ்ட் கேம்ப் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் தான் லால் சிங் சத்தா திரைப்படம்.

Aamir Khan visit to Golden Temple for the success of Lal Singh Chaddha

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கரீனா கபூர். அமீர் கான் கடந்த 5 மாதங்களாக கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டதன் மூலம், சுமார் 20 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார்.

வேக வைத்த காய்கறிகள், டோஃபு, கீரைகள், பயறு வகைகள் மற்றும் பல தானிய ரோட்டிகள் என சிறப்பு புரதச் சத்து நிறைந்த கனமான சைவ உணவுகளாக தனது டயட்டில் எடுத்துக்கொண்டு வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 4ஆம் தேதி துவங்க இருக்கும் வேலையில் அமீர் கான் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் வாகேகுருவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று சர்வ வல்லமை பெற்றுள்ள குருவை தரிசித்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வந்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நாடு முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் சில காட்சிகள் படமாக்கப்படும். அமீர் கான் இதற்கு முன்பாக, டங்கல் மற்றம் ரங் தே பசந்தி படங்களின் சூட்டிங்களுக்காக குஜராத் சென்றள்ளார்.

அதன்பிறகு, தற்பொழுது மூன்றாவதாக லால் சிங் சத்தா திரைப்படத்திற்காக குஜராத் மாநிலத்திற்கு செல்ல உள்ளார். இப்படத்தில் அவர் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் சீக்கியராக நடிக்க உள்ளார்.

மேலும், இப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதியும் அமீர் கானுடன் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படம் 2020ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடப்படவேண்டும் என்றும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X