Aamir Khan: திடீரென சென்னையில் குடியேறப்போகும் அமீர்கான்.. தீயாய் பரவும் தகவல்.. அதுதான் காரணமா?
சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சென்னையில் குடியேறப்போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. முதல் மனைவியை தொடர்ந்து, தனது 2வது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான் அடுத்ததாக ஜனவரி மாதம் தனது மகள் திருமணத்தை நடத்தும் ஏற்பாட்டில் தீவிரமாக இருந்து வந்தார்.
இந்நிலையில், அதையெல்லாம் விட்டு விட்டு தற்போது சென்னைக்கு வந்து அமீர்கான் சில மாதங்கள் குடியிருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமீர்கான் சென்னைக்கு திடீரென வருகை தர உள்ளதற்கு காரணமே அவரது அம்மா தான் என்கின்றனர்.
தற்காலிக ஓய்வு: நடிகர் ஷாருக்கான் தொடர் தோல்வியை சமாளிக்க சினிமாவுக்கு சுமார் 3 ஆண்டுகள் ஓய்வு கொடுத்ததை போலவே நடிகர் அமீர்கானும் தற்போது சினிமாவுக்கு சில ஆண்டுகள் ஓய்வுக் கொடுத்துள்ளார். தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், லால் சத்தா சிங் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து படு தோல்வியை சந்தித்த நிலையில், அமீர்கான் இப்படியொரு முடிவை எடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மகள் திருமணம்: கடந்த ஆண்டு தனது மகளின் நிச்சயதார்த்தத்தை கோலாகலமாக அமீர்கான் மும்பையில் நடத்திய நிலையில், வரும் ஜனவரி மாதம் திருமணம் பிரம்மாண்டமாக ராஜா வீட்டு திருமணம் போல நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் அமீர்கான். இந்நிலையில், மகளின் திருமண வேலையை விட இன்னொரு பெரிய விஷயத்திற்காக அவர் சென்னை வரப் போவதாக கூறுகின்றனர்.
அம்மாவுக்காக சென்னை வரும் அமீர்கான்: நடிகர் அமீர்கானின் தாயார் ஜீனத் உசைன் கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கான மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமீர்கான் அட்மிட் செய்துள்ளார் என்றும் சில மாதங்கள் அவரது சிகிச்சைக்காக இங்கே இருக்க வேண்டும் என்கிற சூழலில், சென்னையில் மருத்துவமனை அருகே ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அமீர்கான் இங்கேயே சிறிது காலம் தங்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தடையில்லாமல்: மேலும், தனது மகள் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தனது குடும்பத்தினரை வைத்து செய்து வரும் அமீர்கான் திருமணத்துக்கு முன்பாக எந்தவொரு தடையும் வரக் கூடாது என பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











