புதிய காதலியுடன் வெளிநாடு பறந்த அமீர்கான்.. கைகோர்த்து புகைப்படம்.. ஒரே பொன் சிரிப்புதான்!
மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகரான அமீர்கான் கடந்த மாதம் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். 2 முறை விவவாகரத்து பெற்ற இவர், தனது பிறந்தநாளில் தனது 3ஆவது காதலியையும் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.நீண்ட கால தோழி கவுரி ஸ்ப்ராட்டுடனான உறவை உறுதி செய்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அதற்கும் தக்க பதிலடி கொடுத்தார். இந்நிலையில், 3வது காதலியுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியிருக்கிறது. எங்கு எந்த இடத்தில் என்பது தான் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.
முன்னதாக அமீர்கான் மும்பை பந்த்ராவில் உள்ள இல்லத்தில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் கேக் வெட்டி 60வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தனது நீண்ட கால தோழி கவுரி ஸ்ப்ராட்டுடனான உறவை உறுதி செய்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருடன் உறவில் இருப்பதாகவும் அமீர்கான் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், கவுரியும் நானும் 25 ஆண்டுக்கு முன்பு சந்தித்தோம். இப்போது நாங்கள் இருவரும் பார்ட்னர்களாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். மேலும், அமீர்கான் இதற்கு முன் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். 2002 இல் முதல் மனைவி ரீனா டட்டாவை விவாகரத்து செய்த அவர் அடுத்து 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். அவரையும் 2021 இல் அமீர்கான் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 வயதில் மகன்: அமீர்கானின் மூன்றாவது காதலியான கவுரி ஸ்பார்ட்டின் சொந்த ஊர் பெங்களூரு. குடும்பத்துடன் மும்பையில் செட்டிள் ஆன அவர், திருமணம் ஆகி கணவரை பிரிந்து தனது 6 வயது மகனுடன் வசித்து வருகிறார். அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பல வருடங்களாக கவுரி வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வருகின்றனர். 60 வயதில் காதலா என பலரு்ம கிசுகிசுக்க தொடங்கினர். இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், அமீர்கான் சிறப்பான பதிலை அளித்தார். நான் எனது முதல் மனைவிகளுடன் தற்போது வரை நட்புறவில் தான் இருக்கிறேன். கிரணை விட்டு பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிரிந்துவிட்டோம் என தெரிவித்தார்.
அமீர்கானின் முதல் மற்றும் இரண்டாம் மனைவிகள் மூலம் அமீர்கானுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. மகன் ஜுனாய்த் கான் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். லவ்டுடே இந்தி ரீமேக்கிலும் இவர் நடித்திருந்தார். மகனுக்கே திருமணம் ஆகாத நிலையில் 60 வயதில் 3வது காதலியை அமீர்கான் தேர்ந்தெடுத்திருப்பதை பாலிவுட் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

காதலியுடன் வெளிநாடு பயணம்: சீனாவில் மக்காவ் சர்வதேச காமெடி விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமீர்கான் தனது மூன்றாவது காதலியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. முதல் முறையாக திரையுலக ரசிகர்கள் கவுரி ஸ்பார்ட் என்பது யார் என்பதை தெரிந்துகொண்டனர். மேலும், அமீர்கானும் கவுரி ஸ்ப்ராட்டும் கை கோர்த்து நடக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் சிரித்துகொண்டே புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











