Sai Pallavi: சூப்பர் ஸ்டார் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி... அசத்தல் பாலிவுட் என்ட்ரி!
சென்னை: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி.
தனித்துவமான நடனத் திறமையால் சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவிக்கு, பிரேமம் திரைப்படம் மிகப் பெரிய அடையாளம் கொடுத்தது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி, பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளாராம்.
பாலிவுட்டில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் மகனுடன் சாய் பல்லவி ஜோடி சேரவிருப்பது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அறிமுகமான நட்சத்திரங்களில் சாய் பல்லவியும் முக்கியமானவர். மிகச் சிறந்த டான்ஸரான சாய் பல்லவி, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடத்த சாய் பல்லவிக்கு, மலையாளத்தில் வெளியான பிரேமம் பெரிய கம்பேக் கொடுத்தது.
அதன்பின்னர் தமிழில் தனுஷ், சூர்யா, தெலுங்கில் நானி, நாக சைதன்யா, மலையாளத்தில் துல்கர் சல்மான், ஃபஹத் பாசில் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து விட்டார். தற்போது சிவகார்த்திகேயனின் SK 21 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக இந்தியிலும் அறிமுகமாகவுள்ளாராம் சாய் பல்லவி. அதிலும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 10 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 2கே கிட்ஸ்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில், லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் வாங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவரது மகன் ஜுனைத் கானை இதில் ஹீரோவாக நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளார். சுனில் பாண்டே இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம்.
இவானா கேரக்டரின் இந்தி வெர்ஷனில் சாய் பல்லவி நடிக்க உள்ளது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய் பல்லவி இந்தியில் அறிமுகமாகும் முதல் படமே, ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது. மேலும், இந்தப் படம் மூலம் சாய் பல்லவிக்கு பாலிவுட்டில் மிகப் பெரிய ஓபனிங் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











