அமீர் கானின் 3வது மனைவியின் சாதியை தேடும் ரசிகர்கள்.. யாருடா நீங்க எல்லாம்? என விளாசும் நெட்டிசன்கள்

சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், இன்று அதாவது ஜூலை 5ஆம் தேதி தனது நீண்டநாள் தோழியான கௌரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 61 வயதான அமீர் கானின் இது மூன்றாவது திருமணமாகும். ஏற்கனவே ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து பின்னர் இருவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றிருந்த நிலையில், தற்போது 47 வயதான கௌரி ஸ்ப்ராட்டுடன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார். இந்த திருமணம் தொடர்பான செய்திகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

அமீர் கான் - கௌரி ஸ்ப்ராட் திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் (Special Marriage Act) கீழ் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ளும்போது இந்த சட்டத்தின் கீழ் திருமணம் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, கௌரி ஸ்ப்ராட் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் அதிகமாக தேடப்பட்டது.

என்ன சாதி?: அதோடு நிற்காமல், ஒரு கட்டத்தில் "அமீர் கானின் மூன்றாவது மனைவி என்ன சாதி?" என்ற தேடல்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்த்துகளை விட, மணமகளின் சாதி என்ன என்பதை அறிந்து கொள்ள சிலர் ஆர்வம் காட்டியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Aamir Khan s Wedding Sparks Online Debate as Netizens Slam Searches About gauri spratt s Caste

இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். "2026-லும் ஒருவரின் சாதியைத் தேடுவதுதான் முக்கியமான விஷயமா?", "இரண்டு பேர் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். அதில் அவர்களின் சாதியை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?", "அவர் எந்த சாதியாக இருந்தால் என்ன? அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை?" என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டு பின்புலம்: கௌரி ஸ்ப்ராட் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் தமிழ் - ஐரிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தந்தை அயர்லாந்தைச் சேர்ந்தவரும் ஆவர். தற்போது அவர் கிறிஸ்தவ மத நம்பிக்கையை பின்பற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த தகவல்களையெல்லாம் தாண்டி, அவரது மதம், சாதி உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களிலேயே சிலர் அதிக கவனம் செலுத்தி வருவது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அமீர் கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவுடனும், பின்னர் இரண்டாவது மனைவி கிரண் ராவுடனும் நீண்டகாலம் வாழ்ந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். ஆனால், இருவருடனும் இன்றளவும் நட்புறவைத் தொடர்கிறார். தனது முன்னாள் மனைவிகளின் மத நம்பிக்கைகளிலும் அவர் ஒருபோதும் தலையிட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Aamir Khan s Wedding Sparks Online Debate as Netizens Slam Searches About gauri spratt s Caste

மகன் முன்னே அறிவித்த அமீர்: முன்னதாக, தனது மகன் ஜுனைத் கான் முன்னிலையிலேயே கௌரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்ய இருப்பதாக அமீர் கான் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த திருமணத்தை விட, மணமகளின் சாதியைத் தேடி விவாதம் நடத்தும் ஒரு தரப்பினரின் மனநிலையைத்தான் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X