பாகுபலி 2 படத்தை முந்திய ஆமீர் கானின் தங்கல்: வசூல் எவ்வளவு தெரியுமா?
மும்பை: ஆமீர் கானின் தங்கல் படம் பாகுபலி 2 படத்தின் வசூலை முந்தி புதிய சாதனை படைத்துள்ளது.
எஸ். எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் தான் உலக அளவில் ரூ. 1000 கோடி மற்றும் ரூ. 1,500 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றது.
அதன் பிறகு ஆமீர் கானின் தங்கல் படமும் ரூ.1000 கோடி, ரூ. 1, 500 கோடி வசூல் செய்தது.

தங்கல்
தங்கல் படம் சீனாவில் இந்த மாத துவகத்தில் வெளியானது. 2 மகள்கள் மீது தந்தை அதிக நம்பிக்கை வைத்து அவர்களை வாழ்க்கையில் பெரிய ஆளாக்கிப் பார்க்க துடிக்கும் கதை சீனர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

பாகுபலி 2
பாகுபலி 2 படம் நேற்று வரை உலக அளவில் ரூ. 1, 633 கோடி வசூலித்துள்ளது. தங்கல் படமோ ரூ. 1, 665 கோடி வசூல் செய்து பாகுபலி 2 படத்தின் வசூலை முந்தியுள்ளது.

கான்கள்
ரூ. 1000 கோடி மற்றும் ரூ.1,500 கோடி கிளப்பை பிரபாஸ் துவங்கி வைத்ததை பார்த்து பாலிவுட்டின் கான்கள் கடுப்பானார்கள். இந்நிலையில் ஆமீர் கானின் படம் பாகுபலி 2 வசூலை முந்தியுள்ளது.

சீனா
சீனாவில் அதிகம் வசூல் செய்துள்ள ஹாலிவுட் அல்லாத படம் தங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை தங்கல் பெற்றுள்ளது.

ஆமீர்
ஆமீர் கானின் தங்கல் சீனாவில் ரிலீஸான பிறகு இந்த வசூல் சாதனை சாத்தியமானது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











