ரஜினியின் 2.ஓ உலக அளவில் பெரும் வெற்றி பெறும்! - ஆமிர் கான்

By Shankar

மும்பை: ரஜினியின் 2.0 படம் உலக அளவில் சூப்பர் டூப்பர் வெற்றி பெறும் என்று இந்தி நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ள அவர், 2.0 படத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் கேட்டார் என்றும் தன்னால் , ரஜினி நடித்த கேரக்டரில் நடிக்க நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஷங்கர் அந்தப் படத்தின் கதையை என்னிடம் கூறினார். மிகவும் அருமையான படம். பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால், அந்த கதையை நினைத்துப்பார்த்தால் அதில் ரஜினி சார் தான் தெரிகிறார். என்னால் அந்த கேரக்டரில் நினைக்கவே முடியவில்லை.

Aamirkhan says 2pointo will be super duper hit

ரஜினி சார் , என்னை போனில் அழைத்து, ஆமிர் நீங்க 2.0 படத்தில் நடியுங்கள் என்று கேட்டார். அப்போது அவருக்கு சற்று உடல் நலக்குறைவாக இருந்ததால், என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் நடியுங்கள், நன்றாக வரும் என்று ரஜினி சார் சொன்னார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

முதல் பாகத்தில் அவர் நடித்திருந்ததார். அதில் அவர் நடிப்பில் மிரட்டி இருந்தார். வேறு யாராலும் அவரைப் போல் நடிக்க முடியாது. என்னால் நிச்சயமாக நடிக்க முடியாது அவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்றும் கூறிவிட்டேன்.

2.0 படம் இந்தியப் பட வரலாற்றிலியே மிகப்பெரிய சாதனை படைக்கும் என்றும் ஆமிர் கான் கூறியுள்ளார். தனக்கு வந்த வாய்ப்பை மறுத்ததோடு, அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பெருந்தன்மையாக கூறிய ஆமீர் கான் போற்றுதலுக்குரியவர்.

எந்திரன் படத்தில் முதலில் கமல் ஹாசன் நடிப்பதாக இருந்து மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுத்தாகிவிட்டது. பின்னர் ஷாருக்கான் பக்கம் போன ஷங்கர், அவருடனும் சரியாக வர வில்லை என்பதால் ரஜினியை சம்மதிக்க வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X