சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்
சென்னை: ஆண் தேவதை திரைப்படத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி, பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ஆண் தேவதை.

சிகரம் சினிமாஸ் மூலம் பக்ருதீனுடன் இணைந்து தயாரித்துள்ளார் இயக்குனர் தாமிரா. இந்த நிலையில், படத்தின் இணைத் தயாரிப்பாளர் பக்ருதீன் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என சென்னையைச் சேர்ந்த நிஜாம் மொய்தீன் என்பவர் பதிமூன்றாவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
படத்தயாரிப்பு செலவுக்காக ரூ.22 லட்சத்தை பக்ருதீன், நிஜாம் மொய்தீனிடம் வாங்கியதாகவும், பேசியபடி அதைத் திருப்பித் தராததால் படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிகரம் சினிமாஸ் உரிமையாளர் ஷேக் தாவூத் மற்றும் பக்ருதீன் விளக்கமளிக்கக் கோரி இடைக்காலத் தடை விதித்தனர்.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பும் சமரசம் ஆகிவிட்டதாக தெரிவித்தனர். அதனையடுத்து ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











