Aan Paavam Pollathathu X Review: ஆண் பாவம் பொல்லாதது படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: நடிகர் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கி உள்ளார். படம் நாளை அதாவது அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரீமியர் ஷோ நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. பிரீமியர் ஷோவில் படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பதை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

ரசிகர் ஒருவர், " படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது, முதல் பாதிக்கு ஏற்ற இரண்டாம் பாதியும் நன்றாக உள்ளது. படத்தில் மிகவும் நன்றாக உள்ள காட்சிகள் என்றால், இடைவேளைக்கு முந்தைய காட்சி, கிளைமாக்ஸில் வரக்கூடிய கோர்ட் ரூம் சீன் நன்றாக உள்ளது. அதேபோல் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ்க்கு இடையிலான ஈகோ கிளாஷ் காட்சிகளும் நன்றாக உள்ளது.

Aan Paavam Pollathathu X Review Rio Raj And Whole Team Receives Positive Reviews After Premiere Show

விக்னேஷ் காந்த் லாயராக வரும் காட்சியும் நன்றாக உள்ளது. படத்தில் பின்னணி இசை சிறப்பு, வசனங்கள் அருமை. படத்தில் சொல்லப்படுகிற மெசேஜும் நன்றாக உள்ளது. ஜென்சன் திவாகரின் காமெடி காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. கொஞ்சம் சலிப்பு தட்டும் காட்சிகள் உள்ளது. மொத்தத்தில் படம் ஜாலியாகவும், எமோஷனலாகவும் ஒரு தரமான கருத்தைத் தாங்கி வந்துள்ளது. புதுமண தம்பதிகளுக்கு படம் நன்றாகவே கனெக்ட் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இன்னொரு ரசிகர், " முதல் பாதி : செம்ம ஃபன் மக்களே, ஆண்கள் தன்னோட பாரத்தை இறக்கி வச்ச மாதிரி இருக்கும், காமெடி & வசனங்கள் செம்மையா ஒர்க் ஆயிருக்கு, போலி பெண்ணிய & பெரியாரியவாதிகளை அடிச்ச வசனம், ஜாலி ரைட் மக்களே. இரண்டாம் பாதி : நல்லா இருக்கு மக்களே. செம்ம ஜாலியான முதல் பாதி முடிஞ்சு இன்றைய காலத்துக்கு தேவையான களத்தில் இருக்கு இரண்டாம் பாதி. குறிப்பாக ஒரு கோர்ட் சீன் & அங்க விக்னேஷ் காந்த் பேசுற வசனங்கள் யதார்த்தத்தின் நிறம் . பெண்ணியவாதம்னா என்னன்னு ஒரு வசனம் சூப்பர் செருப்படி டூ போலிகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Aan Paavam Pollathathu X Review Rio Raj And Whole Team Receives Positive Reviews After Premiere Show

மற்றொரு ரசிகரோ, " நகைச்சுவை, காதல், எமோஷனல் மற்றும் குடும்ப உறவுகள் ஆகியவற்றை சரியாக மிக்ஸ் செய்து படத்தை எடுத்துள்ளார்கள். படத்தில் மிக முக்கியமாக மனதைத் தொடும் திரைக்கதை மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் பார்க்க பக்காவான படம் மிஸ் பண்ணீடாதீங்க மக்களே" என்று பதிவிட்டுள்ளார். படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் நாளை வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X