twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நமீதா 'ஆத் ஆத்மி'யில் சேரலாம்.. 'ஒன்இந்தியா' வாசகர்கள் கருத்து!

    By Sudha
    |

    சென்னை: 3 கட்சிகள் தன்னை அரசியலுக்கு வருமாறு நடிகை நமீதா தெரிவித்துள்ள நிலையில் அவருக்குப் பொருத்தமா்ன கட்சி எது என்று ஒன்இந்தியா-தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த சுவாரஸ்யான கருத்துக் கணிப்பில், நமீதாவுக்கு எந்தக் கட்சி பொருத்தமாக இருக்கும்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நமீதாவே எதிர்பாராத அளவில் வித்தியாசமான முறையில் தங்களது கருத்தை வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

    பெரும்பாலானவர்கள் நமீதாவுக்குப் பொருத்தமான கட்சி என்று கூறியிருப்பது ஆம் ஆத்மியைத்தான். மொத்தம் 26,607 வாக்குகள் இந்த கேள்விக்குப் பதிவாகியுள்ளன.

    ஆம் ஆத்மியில் சேரலாம்

    ஆம் ஆத்மியில் சேரலாம்

    நமீதா ஆம் ஆத்மியில் சேரலாம் என்று பெரும்பாலானவர்கள் அதாவது 23 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குகள் 6143 ஆகும்.

    இல்லை திமுகவில் சேரலாம்

    இல்லை திமுகவில் சேரலாம்

    2வது கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. 18 சதவீதம் பேர் நமீதா திமுகவில் சேரலாம் என்று தெரிவித்துள்ளனர். அப்படி வாக்களித்தவர்கள் 4667 பேர் ஆவர். நமீதா, திமுகவின் கலைஞர் டிவியில் இடம் பெறும் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராக கலந்து கொண்டவர் என்பது நினைவிருக்கலாம்.

    வேண்டாம், தேமுதிகதான் பெஸ்ட்

    வேண்டாம், தேமுதிகதான் பெஸ்ட்

    தேமுதிகாதன் நமீதாவுக்கு பொருத்தமான கட்சி என்று 13 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர். அதாவது 3418 பேரின் கருத்தாகும் இது.

    அதிமுகதான்

    அதிமுகதான்

    அதிமுகதான் நமீதாவுக்குப் பொருத்தம் என்று கருத்து சொல்லியிருப்பவர்கள் எண்ணிக்கை 12 சதவீதமாகும். அதாவது 3071 பேர் இப்படித் தெரிவித்துள்ளனர்.

    பாஜக ஓ.கே.

    பாஜக ஓ.கே.

    நமீதா பாஜகவில் சேரலாம் என்று 11 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர். அதாவது 3038 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ்தான் செம பொருத்தம்

    காங்கிரஸ்தான் செம பொருத்தம்

    காங்கிரஸ் கட்சிதான் நமீதாவுக்குப் பொருத்தமானது என்பது 8 சதவீதம் பேரின் கருத்தாகும். 2109 பேர் இப்படிக் கூறியுள்ளனர்.

    அவருக்கு அரசியல் சரிப்படாது

    அவருக்கு அரசியல் சரிப்படாது

    நமீதாவுக்கு அரசியல் எல்லாம் சரிப்படாது என்றும் கணிசமானவர்கள் சொல்லியுள்ளனர். அதாவது 2238 பேர் கூறியுள்ளனர். அதாவது 8 சதவீதம் பேரின் கருத்தாகும் இது.

    தனிக் கட்சி ஆரம்பிக்கலாமே?

    தனிக் கட்சி ஆரம்பிக்கலாமே?

    நமீதா பேசாமல் தனிக்ககட்சி ஆரம்பிக்கலாமே என்பது 7 சதவீதம் பேரின் கருத்தாகும். அதாவது 1923 பேரின் கருத்து இது.

    English summary
    Oneindia- Tamil readers have expressed their suggestion to actress Nameetha on her joining in Politics. Most of the readers have said that AAP is the best suitable party to the buxom actress to plunge in.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X