மகளின் 1வது பிறந்தநாளுக்கு ரூ.28 லட்சம் மினி கூப்பர் எஸ் பரிசளிக்கும் அபிஷேக் பச்சன்
நாளை முதலாவது பிறந்தநாள் கொண்டாடும் மகள் ஆராத்யாவுக்கு பரிசளிக்க அபிஷேக் பச்சன் பல லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை வாங்கி வைத்துள்ளாராம்.
அபிஷேக், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா நாளை தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கருவிலேயே பிரபலமான ஆராத்யா
ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருந்தபோதே ஆராத்யா எந்த தேதியில் பிறப்பாள் என்று பலர் பெட் கட்டிக் கொண்டிருந்தனர். ஐஸை விட மற்றவர்கள் தான் அவருக்கு எப்பொழுது பிரசவம் நடக்கும் என்று பேராவலாக இருந்தனர்.

ஒரு வழியாக குழந்தை பிறந்தது
ஐஸ்வர்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்தவுடன் அது பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்று ஆளாளுக்கு யூகிக்கத் துவங்கினர்.

குழந்தையையும் காட்டவில்லை, பெயரையையும் கூறவில்லை
ஐஸ்வர்யாவின் மகளை ஊடகங்கள் கண்ணில் படாமல் பல மாதங்கள் வைத்திருந்தனர். குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்த பிறகே அதற்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர். அண்மையில் ஐஸ்வர்யாவுக்கு பிரான்ஸ் அரசு விருது கொடுத்த விழாவில் தான் ஆராத்யாவின் முகத்தை முதன்முதலாக கேமராவுக்கு காட்டினார் ஐஸ்.

முதலாவது பிறந்தநாளுக்கு மினி கூப்பர்
ஆராத்யா நாளை தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறாள். தனது மகளுக்கு பரிசளிக்க ரூ.28 லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற மினி கூப்பர் எஸ் காரை வாங்கி வைத்துள்ளார் அபிஷேக் பச்சன்.


Click it and Unblock the Notifications











