பெரிய நடிகர்களின் பின்னால் ஓடாதீர்கள்… தயாரிப்பாளர் கே ராஜன் பேச்சு!
சென்னை : பெரிய நடிகர்களின் பின்னால் ஓடாதீர்கள் என்று தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளார்.
நடிப்பு, கதை, வசனம், இசை,ஒளிப்பதிவு என அனைத்தும் புதுமுகங்களை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ஆராய்ச்சி.
இப்படத்தில், ஹீரோவாக அனிஷ், பிரியன், ஹீரோனியாக மனிஷா ஜித், கௌசல்யா, சுபா, சலிமா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆராய்ச்சி
மருத்துவ ஆராய்ச்சி பற்றிய இந்த படத்தில் காதல் மையக்கருவாக வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மக்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய நல்லொழுக்கம் குறித்தும் பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இத்திரைப்படத்திற் தணிக்கை யூ சான்றிதழ் அளித்துள்ள நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

கை தட்டி ரசிக்கிறார்கள்
இந்நிலையில் ஆராய்ச்சி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே ராஜன், லவ் டுடே என்ற 5 கோடி ரூபாயில் உருவான சிறிய பட்ஜெட் படம் 50 கோடியை வசூலித்துள்ளது. அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு விசில் அடித்து கை தட்டியது போல, நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கும் கை தட்டி மக்கள் வரவேற்கிறார்கள்.

நிச்சயம் வரவேற்பு உண்டு
பெரிய நன்றாக நடித்தால் தான் ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள் என்று இல்லை. படம், கதை நன்றாக இருந்தால் யார் நடித்தாலும் படத்தை பார்க்க தமிழ் ரசிகர்கள் தயாராக இருக்கிறார். இதை தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டு பல கோடியில் செலவு செய்து படத்தை எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பெரிய நடிகர்களின் பின்னால் ஓடாதீர்கள்
இந்த நேரத்தில் முன்னணியில் இருக்கும் சில தயாரிப்பு நிறுவனங்களிடம் சில கோரிக்கைகளை வைக்கிறேன். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். 100 கோடி 150 கோடி செலவு செய்து பெரிய நடிகர்களின் பின்னால் ஓடாதீர்கள், நீங்கள் அவர்களுக்கு செலவு செய்யும் பணத்தில் 10 படம் எடுக்கலாம். வளரும் இயக்குநர்கள், வளரும் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை வளர்ந்து விடுங்கள் .

கே ராஜன் பேச்சு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட, இன்னைக்கு இருக்கும் நடிகர் சிறப்பாக நடிக்கிறார்களா? சிவாஜியே தயாரிப்பாளரை முதலாளி என்று தான் அழைப்பார். அன்னைக்கு சினிமா நன்றாக இருந்தது. என்னைக்கு நடிகர்களை தயாரிப்பாளர் பாஸ் என்று அழைத்தார்களோ அன்னைக்கே தமிழ் சினிமா செத்துப்பேச்சு என்று ஆவேசமாக பேசினார் தயாரிப்பாளர் கே ராஜன்.


Click it and Unblock the Notifications











