சத்தமில்லாமல் வெளியாகும் அஜீத்தின் ஆரம்பம் பாடல்கள்
சென்னை: அஜீத் குமாரின் ஆரம்பம் பட பாடல் இசை வெளியீட்டு விழா பிரபல ரேடியோ ஸ்டேஷனில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்பொழுது நடக்கும் என்பது பற்றி பலவாறு கூறப்படுகிறது. முதலில் படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 31ம் தேதி இசை வெளியீடு என்று கூறப்பட்டது.
ஆனால் யுவனுக்கு நெருக்கமானவர்களோ இந்த செய்தியை வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஆரம்பம் இசை வெளியீட்டு விழா யுவனின் பிறந்தநாளுக்கு முன்பே நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆரம்பம் இசை வெளியீடு ஆடம்பரமின்றி பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் வைத்து நடக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. ஆரம்பம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












