twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலேசியாவில் அஜீத்தின் அலை 'ஆரம்பம்'

    By Siva
    |

    சென்னை: மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ஆரம்பம் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. அமெரிக்காவில் ரஜினி, கமல் படங்களை அடுத்து ஆரம்பம் அதிகம் வசூல் செய்துள்ளது.

    அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. படம் தமிழகம் தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது. படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.

    இந்த வசூல் வேட்டை மேலும் தொடர்ந்து நடந்து வருகிறது. படம் ரூ.100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மலேசியா

    மலேசியா

    மலேசியாவில் ஆரம்பம் படம் மொத்தம் 80 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிலீஸான முதல் வார இறுதி நாட்களில் மட்டும் ஆரம்பம் சுமார் ரூ.5 கோடி வசூலித்துள்ளது.

    2வது இடம்

    2வது இடம்

    முதல் வார இறுதி நாட்களில் மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ஹாலிவுட் படமான தோர் முதலாவது இடத்திலும், ஆரம்பம் இரண்டாவது இடத்திலும் இருந்தது. ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 3 9வது இடத்தில் இருந்தது.

    ரஜினி, கமல்

    ரஜினி, கமல்

    அமெரிக்காவிலும் ஆரம்பம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் எந்திரன், விஸ்வரூபம், சிவாஜி, தசாவதாரம் ஆகிய படங்களை அடுத்து அதிக வசூல் செய்துள்ளது.

    இங்கிலாந்து

    இங்கிலாந்து

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் ஆரம்பம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

    English summary
    Aarambam is doing well in the Malaysian box office. Ajith's movie emerges as the 5th highest grosser(tamil movie) in US next to Rajini and Kamal movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X