இங்கிலாந்தில் வார இறுதியில் ரூ.1.34 கோடி வசூல்: சிங்கம் 2வை பீட் பண்ணிய ஆரம்பம்

By Siva

சென்னை: ஆரம்பம் படம் ரிலீஸான முதல் வார இறுதி நாட்களில் மட்டும் இங்கிலாந்தில் ரூ.1.34 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.33 லட்சமும் வசூல் செய்துள்ளது.

அஜீத் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் கடந்த 31ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் தமிழகம் தவிர வெளிநாடுகளிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஆரம்பம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம்.

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில்

ஆரம்பம் இங்கிலாந்தில் 37 ஸ்கிரீன்களில் ரிலீஸானது. அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஆரம்பம் படம் ரூ.1.34 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் 7 ஸ்கிரீன்களில் வெளியான ஆரம்பம் வார இறுதி நாட்களில் ரூ.33 லட்சம் வசூல் செய்துள்ளது என்று பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சிங்கம் 2

சிங்கம் 2

சூர்யா நடித்த சிங்கம் 2 இங்கிலாந்தில் ரிலீஸான வார இறுதி நாட்களில் ரூ. 1.08 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் ஆரம்பம் சிங்கம் 2வை வசூலில் முந்தியுள்ளது.

வசூல் வேட்டை தொடரும்

வசூல் வேட்டை தொடரும்

இங்கிலாந்தில் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் வரை ஆரம்பம் படம் தனது வசூல் வேட்டையை சில வாரங்களுக்கு தொடர்ந்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பாக்ஸ் ஆபீஸ்

சென்னை பாக்ஸ் ஆபீஸ்

நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான சென்னை பாக்ஸ்ஆபீஸில் முதலிடத்தை ஆரம்பம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆல் இன் ஆல் அழகு ராஜாவும், மூன்றாவது இடத்தில் பாண்டிய நாடும் இருந்தது என்று சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X