ஆரம்பம் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி

By Mayura Akilan

அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆரம்பம்' திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜீத் - நயன்தாரா, ஆர்யா - டாப்ஸி நடித்து தீபாவளிக்கு வெளிவர உள்ள திரைப்படம் ஆரம்பம். அதிரடி ஆக்சன் படமாக இது உருவாகியுள்ளதாம்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற பல தொலைக்காட்சி நிறுவனங்கள் முட்டி மோதியதாம்.

சன் டிவி, விஜய் டிவி, புதுயுகம், கலைஞர் டிவி என பல சேனல்கள் போட்டி போட சத்தமில்லாமல் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி கைப்பற்றி விட்டதாம்.

15 கோடி ரூபாய் கொடுத்து ஆரம்பம் படத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம், தலைவா படங்களுக்கு நேர்ந்த தடைகள் தங்களின் படத்திற்கு வரக்கூடாது என்றுதான் ஆரம்பம் படத்தை ஆரம்பத்திலேயே ஜெயா டிவிக்கு விற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே விஜயதசமி நாளில் 'மேக்கிங் ஆப் ஆரம்பம்' ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X