“அதில் என்ன தவறு இருக்கிறது?” ஓவியா பற்றிய கேள்விக்கு ஆரவ் காட்டமான பதில்!
ஓவியாவும், தானும் நல்ல நண்பர்கள் எனத் தெரிவித்துள்ளார் ஆரவ்.
Recommended Video
சென்னை: நானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ்வும், ஓவியாவும். முதல் சீசனில் இவர்களது காதல் கதை தான் பெரிதும் பேசப்பட்டது. ஆரவ் ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்தது, பின்னர் காதல் தோல்வியில் ஓவியா, தற்கொலைக்கு முயற்சித்தது, பிக் பாஸில் இருந்து வெளியேறியது என பரபரப்பு சம்பவங்கள் அந்த சீசனில் நடைபெற்றன.

அந்த சீசன் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தொடர்ந்து ஓவியாவும், ஆரவ்வும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். ஆனால் பிக் பாஸில் எதிர்பார்க்கப்பட்டது போல நிஜத்திலும் அவர்கள் காதலர்களாக மாற வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.
எனவே செல்லும் இடங்களில் எல்லாம் ஆரவ்விடமும், ஓவியாவிடமும் இது தொடர்பான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. அப்போதெல்லாம் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகக் கூறி வருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் இருவரும் தாய்லாந்தில் ஒன்றாக ஊர் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இது குறித்து சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "நானும், ஓவியாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே. நாங்கள் காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. இருவரும் ஜோடியாக சுற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? அது ஒன்றும் குற்றம் இல்லையே? எனது முழு கவனமும் இப்போது சினிமாவில் இருக்கிறது. நடிப்பில் பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் நடித்துள்ள மார்க்கெட் ராஜா அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து ராஜா பீமா வெளியாகும். ஓவியாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











