வேறு ஒரு பெண்ணுடன் கமிட் ஆன ஆரவ்: அப்போ ஓவியாவின் காதல்?
சென்னை:ஆரவுக்கு ஆள் இருப்பது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்துள்ளபோது ஓவியாவுக்கு இது தெரியாதா?
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஓவியா ஆரவுடன் நெருங்கிப் பழகினார். ஆரவ் ஓவியாவுடன் நன்றாக கடலை போட்டார். ஆனால் ஓவியாவின் காதலை அவர் ஏற்கவில்லை.
இந்த காரணத்தால் ஓவியா மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார்

ஆரவ்
ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பியபோது ஆரவ் அவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஓவியாவோ வெளியே வந்த பிறகும் ஆரவ் நினைப்பிலேயே உள்ளார்.

காதல்
என்னுடையது உண்மையான காதல். அதை நிச்சயம் மீட்டெடுப்பேன். உண்மை காதல் ஜெயிக்கும் என்று படத்தில் பேசுவது போன்று காதல் வசனம் பேசியுள்ளார் ஓவியா.

கமிட்
ஆரவு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் கமிட் ஆகியுள்ளார். இது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்துள்ளது. அப்படி இருக்கும்போது அது ஓவியாவுக்கு தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படி
ஏற்கனவே கமிட் ஆன ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் அந்த பெண்ணுடன் தான் இருப்பார். அப்படி இருக்க ஓவியாவின் காதல் எப்படி ஜெயிக்கும்?


Click it and Unblock the Notifications











