பிக் பாஸ் ஆரவுக்கு ப்ரமோஷன் கிடைச்சிருச்சு...
சென்னை:பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவுக்கு சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். பிக் பாஸ் டைட்டிலை கணேஷ் வெங்கட்ராம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்த்தபோது அது ஆரவுக்கு கிடைத்தது.
இதையடுத்து ஆரவை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

கதை
என்னை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி தெரிவிப்பேன் என்று ஆரவ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

சரவணன்
பிக் பாஸுக்கு பிறகு என் முதல் படம். சிலம்பாட்டம் புகழ் சரவணன் இயக்கத்தில். விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட். மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆரவ் ட்வீட்டியுள்ளார்.

நடிப்பு
படங்களில் ஓவியாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று ஆரவிடம் முன்பு கேட்டதற்கு நிச்சயம் நடிப்பேன் என்றார். இந்த படத்தின் நாயகி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

படங்கள்
ஆரவை காதலித்து தோல்வி அடைந்த ஓவியா தற்போது படங்களில் பிசியாக உள்ளார். இது தவிர அவர் விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரவும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











