குவியும் வாழ்த்துகள்.. நடிகர் ஆரவ்வுக்கு அடுத்த மாதம் திருமணமாமே.. மணப்பெண் அந்த நடிகையாம்!
சென்னை: நடிகர் ஆரவ், நடிகை ஒருவரை செப்டம்பர் 6-ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். 2017-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர்.
அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, ஓ காதல் கண்மணி மற்றும் சைத்தான் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஓவியாவுடன் காதல்
இவர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் ஹீரோ ஆனார். தற்போது ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகை ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது. ஆரவ் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.
Recommended Video

நாங்கள் நண்பர்கள்
பின்னர் காதல் தோல்வியில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியானது. இதன் பிறகும் இருவரும் தொடர்ந்து பழகி வருகின்றனர். இருவரிடமும் அந்த காதல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் நண்பர்கள்தான், நாங்கள் காதலிக்கவில்லை. என் முழுக்கவனமும் சினிமாவில் இருக்கிறது என்று கூறி இருந்தார்.

காதலி ராஹி
இதற்கிடையே தற்போது நடிகர் ஆரவ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது நீண்டகால காதலி ராஹியை அடுத்த மாதம் 6 ஆம் தேதி, சென்னையில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜோஷ்வா ஹீரோயின்
ஆரவ் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ராஹி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் ஜோஷ்வா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஆடை வடிவமைப்பாளரும் கூட. இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வருவதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கொரு காதலி இருப்பதாக ஆரவ் சொன்னது இவரைத்தான் என்றும் அவர் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

வரவேற்பு நிகழ்ச்சி
ஆரவ் - ராஹி திருமணம் இருவரது வீட்டார் சம்மதத்துடன் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளது. திருமணம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அவர்களுக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











