பிசிக்கல் வயலன்ஸ் ஆகிடும்.. எச்சரித்த ஆரி.. கேட்காமல் கத்திய அர்ச்சனா.. கலவரமான பிக் பாஸ் வீடு!
சென்னை: யார் என்ன பேசுறாங்க, எதுக்கு பேசுறாங்கண்ணே தெரியாமல் பிக் பாஸ் ரசிகர்கள் இந்த எபிசோடை பார்த்து குழம்பிப் போயிருப்பார்கள்.
அந்த அளவுக்கு இடியாப்ப சிக்கல் டாஸ்க்கை பிக் பாஸ் டீம் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளது.
இஷ்டத்துக்கு விளையாடினால், பிசிக்கல் வயலன்ஸ் ஆகிடும் என ஆரி அவ்வளவு எச்சரித்தும் ஹவுஸ்மேட்கள் கேட்காமல் ஆடி வருகின்றனர்.

இடியாப்ப சிக்கல்
கோழியும் நரிகளுமாக ஹவுஸ்மேட்கள் இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர். இந்த கேமுக்காக போடப்பட்ட ரூலை எந்தவொரு போட்டியாளரும் சரியாக புரிந்து கொண்டனரா? என்கிற மிகப்பெரிய சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அந்த அளவுக்கு இடியாப்ப சிக்கலாய் கேமை ஆடி வருகின்றனர்.

வில்லங்கமான விளையாட்டு
நரியின் வாலை பிடித்து இழுக்கணும் என்கிற வில்லங்கமான விளையாட்டை பிக் பாஸ் குழு அமைத்துள்ளது. கேம் ஆடுறது கேம் இல்லை. சண்டை போடுறது தான் கேமே என்கிற ரீதியில் தான் இந்த டாஸ்க்கை உருவாக்கி உள்ளனர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

பிசிக்கல் வயலன்ஸ்
விளையாட்டை விளையாட்டா ஆடுங்க, இஷ்டத்துக்கு ஆடினா அப்புறம் பிசிக்கல் வயலன்ஸ் ஆகிடும் என தெள்ளத் தெளிவாக தொலைநோக்குப் பார்வையுடன் ஆரி பேசியதை ஹவுஸ்மேட்கள் யாருமே காது கொடுத்துக் கேட்பதாக தெரியவில்லை. ரியோவும் ஆரம்பத்தில் இருந்தே ரூல்ஸை தெளிவாக விளக்கினாலும் யார் மண்டையிலும் ஏறவே இல்லை.

ஏடாகூடமாக தொட்டால்
கும்பலாக வரும் போது, யாரை தொடுகிறோம், யாரை இடிக்கிறோம் என்று தெரியாது. ஆண் போட்டியாளர்களும், பெண் போட்டியாளர்களும் இணைந்து விளையாடும் விளையாட்டில் ஆண்கள் ஏடாகூடமாக தொட்டு விட்டால், அது பெரிய சர்ச்சையையே கிளப்பி விடும் என்பதை உணர்ந்து கொண்டு ஆரி பேசினாலும், அர்ச்சனா உள்ளிட்டோர் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அனிதா அடி வாங்கியதும் தான் ஆரிக்கு அந்த பயமே வந்து பேச ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை வெடிக்கும்
அப்படி ஏதாவது சர்ச்சை வெடிக்காதா? அதை வைத்து இந்த வாரத்திற்கான டி.ஆர்.பியை ஏற்றி விட முடியாதா? என்கிற நோக்கத்துடன் தான் இப்படியொரு விவகாரமான டாஸ்க்கை ஹவுஸ்மேட்களுக்கு பிக் பாஸ் குழு கொடுத்திருப்பதாகவே பிக் பாஸ் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அர்ச்சனா விழுந்ததை புரமோவில் காட்டிய நிலையில், நிகழ்ச்சியில் அது இடம் பெறவே இல்லை.

ரூல்ஸில் தெளிவாக
நரிக்கூட்டம் கும்பலாக செல்லாமல், தனித்தனியாகத் தான் கோழிகளின் முட்டையை அபகரிக்க முயற்சிக்க வேண்டும். நரியிடத்தில் கோழிகள் தங்களது முட்டையை காப்பாற்ற மட்டுமே டீலிங் போட வேண்டும் என ரியோ படித்த ரூல்ஸை மீறி பாலா, அர்ச்சனா என பலரும் விளையாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











