பாத்ரூம் போகும் போது கூட டிஸ்டர்ப் பண்ணுவாங்க போல.. பாவம் ரம்யா.. வச்சு செய்யும் ஆஜீத், ஆரி!

சென்னை: ரோபா பல் துலக்குவதே ஆச்சர்யமான ஒன்று தான். ரோபாவாக பல் துலக்கும் ரம்யா பாண்டியனை போட்டு ஆஜீத்தும், ஆரியும் கலாய்க்கும் காட்சிகளை இன்றைய அன்சீனில் புரோமோவில் காட்டி உள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ரோபோவை மனிதர்கள் டார்ச்சர் செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா, நிஷா பொங்கிய புரமோக்கள் வைரலான நிலையில், அன்சீன் புரமோவில் ரம்யா சிக்கித் தவிக்கிறார்.

பாத்ரூம் ஏரியாவிலும் அராஜகம்

பாத்ரூம் ஏரியாவிலும் அராஜகம்

ரோபோக்கள் மீதான அராஜகம் பாத்ரூம் ஏரியாவிலும் தொடர்வதை தற்போது வெளியாகி உள்ள அன்சீன் புரமோ அழகாக வெளிக்காட்டி உள்ளது. ரோபோவாக இருக்கும் ரம்யா பாண்டியன், பாத்ரூம் ஏரியாவில் பல் துலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆஜீத் மற்றும் ஆரி மூலமாக அவருக்கு சிக்கல் ஆரம்பிக்கிறது.

சைத்தான் சைக்கிள்ல வருது

சைத்தான் சைக்கிள்ல வருது

சூப்பர் சிங்கரான ஆஜீத், பாத்ரூம் ஏரியாவில் பல் துலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் ரோபோவிடம், போர் அடிக்குது, ஒரு பாட்டுப் பாடு என கேட்க, ஆஹான் சைத்தான் சைக்கிள்ல வருது என நினைத்துக் கொண்ட ரம்யா பாண்டியன், பல் துலக்கிக் கொண்டிருக்கும் போதே, இஞ்சி இடுப்பழகி பாட்டைப் பாடுகிறார்.

ஆரி பூதம்

ஆரி பூதம்

ஆஜீத் சைத்தான் அட்டகாசம் பண்ணிய நிலையில், ரம்யாவுக்கு அடுத்த பூதமாக ஆரி அர்ஜுனா என்ட்ரியாகி அப்படியே சிரித்துக் கொண்டே, பளிச்சிடும் வெண்மைக்கு பல்லை தினமும் விலக்குங்க என சொல்லத் தூண்டுகிறார். ரம்யா ரோபாவும் அதை அப்படியே கூற, நல்லா சிரித்துக் கொண்டே சொல்லுங்க என வச்சு செய்கிறார் ஆரி.

ரம்யாவின் ரிவெஞ்ச்

ரம்யாவின் ரிவெஞ்ச்

ரம்யா பாண்டியன் மனிதராகவும், ஆரி ரோபோவாகவும் மாறும் போது, ரம்யா பாண்டியன் எப்படி ரிவெஞ்ச் எடுக்கப் போகிறார் என்பதில் தான் சுவாரஸ்யமே இருக்கு என ரம்யா பாண்டியன் ஆர்மியினர் இந்த அன்சீன் புரமோவை பார்த்து ஆரிக்கு எதிராக பொங்கி வருகின்றனர்.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL
நாமதான் பாவம் கணேசன்

நாமதான் பாவம் கணேசன்

விஜய் டிவியில் யாருப்பா அந்த பாவம் கணேசன்னு புதுசா ஒரு சீரியலையே ஆரம்பித்த நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் பாவம் தான் எனவும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். தகுதியானவர்களை வெளியே அனுப்பிட்டு, விஸ்வாசமான ஊழியர்களுக்கு விருது கொடுக்க விஜய் டிவி முயற்சி செய்வது தெரிந்தும், வேறு வழியின்றி பார்க்கிறோம் என ட்ரோல் செய்து தொங்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X