நைட்டி போட்டு ஆடியும் போரிங்னு சொல்லிட்டாங்களே.. அப்செட்டான ஆரி.. ஜெயில்மேட் யார் தெரியுமா?

சென்னை: ஒருத்தர் சொன்னா தொடர்ந்து எல்லோரும் அவரையே சொல்லும் ஃபேவரிஸம் பிக் பாஸ் வீட்டுல இருக்குன்னு மறுபடியும் ஆரியை ஜெயில் அனுப்பியதன் மூலம் நல்லாவே காட்டிட்டாங்க..

ரொம்ப போரிங்கா கேம் ஆடுறது, மொக்கை போடுறதுன்னு இந்த வீட்டில் இருப்பவர்கள் இவங்க ரெண்டு பேர் தான்னு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஓட்டுப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க.

ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு வேற ஆரியை நிச்சயம் பார்ப்பீங்கன்னு அவரே சொல்றாரு.. நம்புவோம்.

முந்திரிக் கொட்டை பாலாஜி

முந்திரிக் கொட்டை பாலாஜி

எல்லாத்துலயேம் முந்திக் கொண்டு இப்பல்லாம் செமயா கேம் விளையாடுறாரு பாலாஜி முருகதாஸ். சனம் ஷெட்டியை நாமினேட் செய்து ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சது போல, போரிங் யாருன்னு சொல்வதிலும், முதல் ஆளாக வந்து ஆரி பிரதர், ஆஜீத் என அதற்கான காரணங்களையும் அடுக்கினார்.

லைன் கட்டிக்கிட்டு

லைன் கட்டிக்கிட்டு

கேம் ஒழுங்கா ஆடல, அட்வைஸ் பண்றாரு என போரிங்கா விளையாடுறாருன்னு பாலாஜி சொன்னதையே அடுத்து வந்த அனைத்து போட்டியாளர்களும் வால் பிடித்த கூட்டமாக லைன் கட்டிக் கொண்டு சொல்லி நல்ல மனுஷன் ஆரியை ஜெயில்ல தூக்கிப் போட்டுட்டாங்க.. நல்லதுக்கு காலமே இல்லை.

நைட்டி போட்டு ஆடியும்

நைட்டி போட்டு ஆடியும்

மியூசிக்கல் சேர் போட்டியில், நிஷா அக்கா நைட்டியை எல்லாம் வாங்கி போட்டு கொண்டு ஆடி அசத்திய ஆரியை பார்த்தா போரிங் போட்டியாளர்னு சொல்றீங்க என பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகளாக தெறிக்கவிட்டு வருகின்றனர். வேல்முருகன், ஷிவானி, கேபி எல்லாம் என்ன பண்ணாங்க என்றும் கேள்விகள் பறக்கின்றன. நியாயத்தை எதிர்பார்க்கிற இடமா இது?

ஜெயில் மேட்

ஜெயில் மேட்

இதுலயேயும் ஆரிக்கு ஜெயில் மேட்டா வந்து வாச்சிருக்கிறது நம்ம குட்டி ஜோசியர் ஆஜீத் தான். பையன் விவரமா? ஏகப்பட்ட விளையாட்ட விளையாடினாலும், எப்ப பார்த்தாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கிறதால, அவனையும் போரிங்னு தூக்கி உள்ளே போட்டுட்டாங்க.. அங்கேயும் ஆரி இவனுக்கு அட்வைஸ் பண்ணி சாவடிப்பாரே என்கிற ஒரே கவலை மட்டும் தான் ஆஜீத்துக்கு..

Recommended Video

Bigg Boss Day 18 Highlights • அர்ச்சனா Second பிக் பாஸ் போல? | Bigg Boss 4 Tamil
அந்த சலுகை

அந்த சலுகை

ஜெயிலிலேயே போட்டு அடைத்து விடுவார்கள் என பார்த்தால், உடனே அடுத்த டாஸ்க்கான எவிக்‌ஷன் லிஸ்ட் டாஸ்க் மற்றும் ஜித்தன் ரமேஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் என இரண்டுக்குமே ஆரி மற்றும் ஆஜீத்தை ஜாமீன் இல்லாமலே பிக் பாஸ் விடுதலை செய்து சலுகை அளித்தார். (ரியல் ஜெயிலிலே வெளியே வந்துட்டு போறாங்க)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X