இனிமே ஆரி இல்லை சூடு.. நெத்தியில அடிச்சமாதிரி சொல்லப் போறாரு.. ரியோவுக்கு ரொம்பத் தான் வாய்!

சென்னை: மீண்டும் ஆரியை சுவாரஸ்யமில்லாத போட்டியாளர் என ஹவுஸ்மேட் தேர்வு செய்த நிலையில், இப்பப் பாருங்கடா என் சுவாரஸ்யத்தை காட்டுறேன்னு, மனுஷன் டென்ஷன் ஆகிட்டார்.

இந்த வீட்டில குரூபிசம், ஃபேவரிசம்னு எல்லா கன்றாவியும் இருக்கு, அதை யாரெல்லாம் பண்றீங்கன்னு பேர் சொல்லி நெத்தியில அடிச்ச மாதிரி சொல்லப் போறேன் என ஆரி சூடாகி பேசிய முதல் புரமோ வைரலாகி வருகிறது.

ஆரியையும், அனிதாவையும் நல்லாவே பிக் பாஸ் போட்டியாளர்கள் கார்னர் பண்றாங்க.

சூடான ஆரி

சூடான ஆரி

ஆரின்னு பேர் வச்சுக்கிட்டு இவ்ளோ சூடாகலாமா என மறுபடியும் கமல் சார் இந்த வாரமும் கேட்பாரா? இல்லை ஆரிக்காக மத்த ஹவுஸ்மேட்ஸை வெளுப்பாரா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். சும்மா ஒரு மனுஷனையே ட்ரிகர் பண்ணுவது கொஞ்சமும் நியாயம் கிடையாது என்பது இன்றைய முதல் புரமோவில் தெரிகிறது.

நல்லவனா இருந்தா பொறுக்காது

நல்லவனா இருந்தா பொறுக்காது

யோக்கியனுக்கு நைட்ல என்ன வேலை என வின்னர் படத்தில் வரும் காமெடி போல, நல்லவனா இருக்கும் நடிகர் ஆரிக்கும் பிக் பாஸ் வீடு நிஜமாகவே செட் ஆகவில்லை. அட்வைஸ் பண்ணா தப்புன்றாங்க, மொட்டை தாத்தா அடிச்சி விளையாடுனா, சூப்பர் கேம்ங்கறாங்க.. ச்சே.. என்ன ஒரு உலகம் பாவம் ஆரி.

அனல் பறக்கும் புரமோ

அனல் பறக்கும் புரமோ

இன்றைய எபிசோடின் முதல் புரமோவே அனல் பறக்குது. நடிகர் ஆரியையும், அனிதா சம்பத்தையும் போரிங் போட்டியாளர் என ஹவுஸ்மேட்ஸ் முடிவு பண்ண உடனே, கடுப்பான ஆரி இந்த வீட்டில் குரூபிசம், ஃபேவரிசம் இருப்பது பச்சையாக தெரியுது பிக் பாஸ் என மீண்டும் கம்ப்ளைண்ட் பண்ணுகிறார்.

நெத்தியில அடிச்ச மாதிரி

நெத்தியில அடிச்ச மாதிரி

யார் யாரு, யார் கூட பேசுறீங்க, யார் கூட கடலை போடுறீங்கன்னு எல்லா மேட்டரும் எனக்குத் தெரியும். அவங்களை பேர் சொல்லி நெத்தியில அடிச்ச மாதிரி சொல்லுவேன் என கொதிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் ஆரி அர்ஜுனா. பாவம் இரண்டாவது வாட்டி ஜெயிலுக்கு போகணும்னா டென்ஷன் ஆகுமா ஆகாதா.

மிக்சர் தின்னுகிட்டு

மிக்சர் தின்னுகிட்டு

கேபி, சோமசேகர், வேல்முருகன், ஜித்தன் ரமேஷ் எல்லாம் ஆரி மற்றும் அனிதா சம்பத் பர்ஃபார்ம் பண்ற அளவுக்கு கூட இதுவரைக்கும் பண்ணல. ஷிவானி லவ் டிராக் ஆரம்பிச்சிட்டாங்க, அனிதா சம்பத் விஜயதசமி ஷோவில் ஆங்கராகவும், நடுவராகவும் இருந்தாங்க இந்த அளவுக்கு இருக்குறவங்களை டார்கெட் பண்ணிட்டு சும்மா மிக்சர் தின்றவங்களை சவாலான போட்டியாளர் என சொல்றது எல்லாம் டூமச்.

இப்பவே சொல்லு

இப்பவே சொல்லு

அதென்ன தனியா சொல்றது, இப்பவே சொல்லுங்க என ரியோ ராஜ் எகிற மற்ற அதிகாரவர்கத்தினரான அர்ச்சனா, சம்யுக்தா எல்லாமே இப்பவே சொல்லுங்க என மறுபடியும் குரூப்பா சேர்ந்துகிட்டு ஆரி புரோவை அட்டாக் பண்றதெல்லாம் நியாயமே கிடையாது. வெளிப்படையா பேச வேண்டாம்னு மறைமுக வார்னிங் கொடுத்தும், அவரை இன்னும் சூடாக்குறாங்க போட்டியாளர்கள்.

அம்மாக்கும் பிள்ளைக்கும் முட்டிக்கிச்சு

அம்மாக்கும் பிள்ளைக்கும் முட்டிக்கிச்சு

சனம் ஷெட்டி கூட இருக்க சண்டை சப்புன்னு இருக்கிறதால, மறுபடியும் அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் சண்டை நடக்கும்னு தான் தெரியுது. ஆங்கிலத்தில் தனக்கு தெரிந்த ஒரே வார்த்தையான டிப்ளோமாஸியை மீண்டும் எடுத்து பாலா பயன்படுத்த, அர்ச்சனா உடனே குழந்தையை மிரட்டுவது போல வாயை மூடுன்னு சொல்வது போல பேசியதும், பாலாவுக்கும் சுள்ளுன்னு ஏறிடுச்சு, பார்க்கலாம் இன்னைக்காவது சண்டை போடுறாங்களான்னு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X