பொட்டுல அடிச்சா மாதிரி சொல்லிட்டாருய்யா ஆரி.. செம.. மனுஷன் கிரேஸ் ஏறிக்கிட்டே போகுதே!
சென்னை: ஷிவானியிடம் ஆரி கேட்ட அந்த கேள்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் விடை கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் எபிசோடு இன்று ஒளிபரப்பப்பட்டது. இதன் முதல் செக்மெண்டிலேயே ஒரே செண்டிமென்ட்டாக இருந்தது.
அனிதா சம்பத் தனது அம்மாவை பற்றி உருக்கமாக பேசி கண்ணீர் விட்டு அழுதார். அவரை நிஷா கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

கார்டன் ஏரியா
தன்னைத்தானே எமோஷ்னல் இடியட் என கூறிக்கொண்டார் அனிதா சம்பத். அழக்கூடாது என வீட்டில் சொன்னார்கள், ஆனால் என்னால் முடியவில்லை என்றார். தொடர்ந்து ஆரி, ஷிவானி, மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசும் காட்சிகள் காட்டப்பட்டன.

பேசுபவர்கள்தான் செய்கிறார்கள்
அப்போது பேசிய ஷிவானி, எல்லோரும் கேம் பிளான் என்கிறார்கள். எனக்கு எந்த கேம் பிளானும் இல்லை எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்கிறேன். கேம் பிளானை பற்றி பேசுபவர்கள்தான் அதை செய்கிறார்கள் என தோன்றுகிறது என்றார்.

ஷிவானி பதில்
அப்போதுதான் ஆரி அந்த கேள்வியை கேட்கிறார். அதாவது, தினமும் மாலை 4 மணிக்கு உன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஷேர் செய்கிறாயே அது எதற்கு என கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் ஷிவானி, வேற என்ன அப்ரிசியேஷனுக்குதான் என்று கூறுகிறார்.

செம பதில்
அதற்கு அவ்ளோதான்.. இதெல்லாம் விட்டுட்டு போய்க்கிட்டே இரு.. யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காலி பண்ணிட்டு ஜெயிக்கனும்னு நினைப்பாங்க. என்னை காலிப்பண்ணிட்டு போகனும் நினைப்பாங்க.. இதெல்லாம் பார்க்காம நாமபாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கனும் என நச்சென கூறிவிட்டார்.

தலைவிக்கு சப்போர்ட்
மேலும் பாலாஜி முருகதாஸூம் ஷிவானி, கேம் பிளே பண்ணுவது போன்று தெரியவில்லை என சப்போர்ட் செய்கிறார். மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் பெண்கள் பக்கம் ஷிவானிக்கு எதிர்ப்பு இருந்தாலும் ஆண்கள் தலைவிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











