Just In
- 1 hr ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 1 hr ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 2 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 3 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
- News
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தானே தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட பாலாஜி.. பக்காவா பதில் கொடுத்த ஆரி.. வேற லெவல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க கால்செண்டர் டாஸ்க் நடைபெற்றது. இதில் பாதி டாஸ்க் நடைபெற்ற நிலையில் மீதி டாஸ்க் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கால் செண்டர் டாஸ்க் தொடங்கியிருப்பது தெரியவந்தது.

ஆரியை வெறுப்பேற்றிய பாலாஜி
இதில் ஏற்கனவே ஆரியுடன் பிரச்சனையில் உள்ள பாலாஜி, இன்றைய எபிசோடில் மீண்டும் ஆரிக்கு கால் செய்து கன்னாபின்னாவென கேள்விகளை கேட்கிறார். பாலாஜியின் பேச்சு முழுக்க முழுக்க ஆரியை வெறுப்பேற்றும் வகையிலேயே இருந்தது.

இரண்டாவது புரமோ
இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜி, வேண்டும் என்றே ஆரியை வம்பிழுக்கிறார் என கூறினர். சமூக வலைதளங்களில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

லவ் பெட்டில் பாலாஜி
இதில் பேசும் ஆரி, நான் பதில் சொல்லக்கூடாது, அவன் கருத்து மட்டும் வரணும். அது எனக்கு எதிராய் இருக்க வேண்டும், அவ்ளோதான் என்கிறார். இதனை தொடர்ந்து பாலாஜி லவ் பெட்டில் அமர்ந்து அர்ச்சனா மற்றும் நிஷாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆடியன்ஸுக்கு புரியணும்
அப்போது பேசும் நிஷா, கேட்டிருக்கலாமோ என்பது எங்களுடைய சஜ்ஜஷன் என்கிறார் நிஷா. அதற்கு பதில் சொல்லும் பாலாஜி என் கான்செப்ட்டே இதான், ஆடியன்ஸுக்கு கிளியரா புரியணும். எதுக்காக இவங்க ரெண்டு பேரும் கத்திக்கிட்டாங்க.. இந்த மிஸ்அன்டர்ஸ்டாண்டிங்கெல்லாம் இருந்திருக்கு அவங்களுக்கு என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

ஆரி பேச்சு..
மேலும் இதுக்கு மேல யார்க்கிட்டேயும் இனிமே வாய்ஸ் ரைஸ் பண்ணிக்கூட பேச விரும்பல என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறார் பாலாஜி. அவரை தொடர்ந்து சனத்திடம் பேசுகிறார் ஆரி. அப்போது நீங்க நினைச்சுக்கலாம் நான் சொன்னதுதான் தப்புன்னு, நான் நினைக்கலாம் நீங்க சொன்னதுதான் தப்புன்னு என்று சொல்கிறார் ஆரி.

காலை கட் செய்திருக்கலாம்
இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ. இதனை பார்க்கும் போது, ஆரி பதிலே சொல்லாமல் காலை கட் பண்ணியிருக்க வேண்டும், அல்லது தான் நினைத்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிட்டு பாலாஜியே ஆரியை பேசவிடாமல் காலை கட் செய்திருக்கலாம் என தெரிகிறது.

சிக்கிய பாலாஜி?
என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். இருவருக்கும் இடையில் நடந்த கால் உரையாடல்களை காண ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர். ஆனால் பாலாஜியின் முகத்தை பார்க்கும் போது அவர் வைத்த பொறியில் அவரே சிக்கிவிட்டதாக தெரிகிறது.