டிக்கெட் டூ ஃபினாலே குறித்து ஆரி பேசிய பேச்சு.. சோம் முகத்துல ஈயாடல.. அதிரடி புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரம் என்பதால் எவிக்ட்டான போட்டியாளர்களான அர்ச்சனா, ரேகா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.
எஞ்சிய போட்டியாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

ஃபினாலேவில் சோம சேகர்
அதன்படி ஹவுஸ்மேட்ஸ் கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் குறித்து பேசுகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகளில் அதிக பாயிண்ட்ஸ்களை பெற்று சோம சேகர் டிக்கெட் டூ ஃபினாலேவை தட்டிச்சென்றார்.

வாயடைத்து போன சோம்
இந்நிலையில் இன்றைய எபிசோடில் அதுகுறித்து பேசும் டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதில் ஆரியும் பாலாஜியும் பேசும் பேச்சை பார்த்து வாயடைத்து போயுள்ளார் டிக்கெட் டூ ஃபினாலே வின்னரான சோம சேகர்.

ஒரு வாரம் சரியா இருந்து
அதுகுறித்து பேசும் ஆரி, ஃபினாலே டிக்கெட் யாரோ ஒருத்தருக்குதான் கிடைக்க போகுது. இந்த ஒரு வாரம் சரியா இருந்து நான் ஃபினாலேவுக்கு போகணுமா இல்ல 91 நாள் நான் சரியா இருந்ததுக்காக நான் ஃபினாலேவுக்குள்ள போகணுமா அப்படிங்ற கேள்வி எனக்குள்ள இருந்துச்சு.

பாலாஜி பேச்சு
நேர்மையா இருந்ததுக்கு எனக்கு கிடைச்ச மொமென்ட்டா அதை நான் பார்க்கிறேன் என்கிறார். தொடர்ந்து பேசிய பாலாஜி, கேம்ம நான் கேம்மாதான் பார்த்தேன். அதை தாண்டி எதுவும் பார்க்கல. 11 பேர் எனக்கு எதிரா வாதாடும்போது எனக்கு ஹேப்பியானதான் இருந்துச்சு.

பெண்கள் குறைவு இல்லை
என்ஜாய் பண்ணேன் அந்த மொமென்ட்ட. எந்த வகையிலும் ஆஸ்கர் வின் பண்ணி ஒரு ஸ்பீச் கொடுப்போம் இல்லையா அந்த ஃபீல் இருந்தது என்று கூறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.


Click it and Unblock the Notifications











