உனக்காவது ஷிவானி இருக்குடா.. நான்லாம் யார்கூட பேசுறது.. ஆரியை அணைத்துக்கொண்ட பாலா.. அள்ளும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

ட்ரூ வாரியர் சனம் !ஓவரா ஒப்பாரி வச்சு அழுத அனிதா | Bigg Boss Highlights

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக ஆரிக்கும் பாலாஜிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரியிடம் வேற எதையாவது நீட்டி பேசுவேன் என்று கூறிய பாலாஜி, காலை நீட்டி பேசி அவமானப்படுத்தினார்.

தொடர்ந்து கேப்டன் டாஸ்க்கின் போதும் தான் தோற்க ஆரிதான் காரணம் என குற்றம் சாட்டினார் பாலாஜி. இதனால் குறும்படம் போட்டு பகை போதையில் இருந்த பாலாஜியை தெளிய வைத்தார் கமல்.

மூன்றாவது புரமோ

மூன்றாவது புரமோ

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் பாலாஜி, ஆரி, அனிதா, ஷிவானி, ஆகியோர் சேர்ந்து பேசுவது காட்டப்பட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

ஷிவானி மேல அன்பு

ஷிவானி மேல அன்பு

இதில் கார்டன் ஏரியாவில் ஆரியும் பாலாஜியும் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது பேசும் ஆரி, உனக்கு நான் என்ன சொல்றன்னா உனக்கு ஷிவானி மேல அன்பு இருக்கு கரெக்ட்.. அதை கேம்க்குள்ள கொண்டுவராத என்று பாலாஜியிடம் கூறுகிறார்.

நீ முதல்ல தெளிவா இரு

நீ முதல்ல தெளிவா இரு

தொடர்ந்து பேசும் ஆரி, கேம்குள்ள நீ முதல்ல தெளிவா இரு. ஒருத்தருக்காக இன்னொருத்தர் விளையாடுறது. அவங்கள காப்பாத்துறது, அன்பு வச்சுருக்குறது.. இது எதுக்கு என்றும் கேட்கிறார்.

பேச ஆளு இருக்காது..

பேச ஆளு இருக்காது..

ஆரி சொன்னதை கேட்ட பாலாஜி, உங்களுக்கு எனக்குல்லாம் பாத்தீங்கன்னா ஒரு பாயிண்டுக்கு மேல பேச இங்கே ஆளு இருக்காது. அப்போ தனியா உட்காந்து இருப்போம் என்று கூறுகிறார்.

உனக்காவது ஷிவானி இருக்குடா

உனக்காவது ஷிவானி இருக்குடா

அதற்கு பதில் சொல்லும் ஆரி, உனக்காவது ஷிவானி இருக்குடா.. நான்லாம் யார்கூட பேசுறது சொல்லு.. என்று பாலாஜியை கேட்க, அவளும் போயிடுவா. அவளையும் பேக் பண்ணி அனுப்பிச்சுடுவாங்க.. என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

ஜாலியா எடுத்துட்டுப்போ

ஜாலியா எடுத்துட்டுப்போ

மேலும் ஆரியை கட்டியணைக்கும் பாலாஜி, குட்லக் ஐ அம் சாரி எல்லாத்துக்குமே.. டைட்டில் வேணுமா, தகுதியாயிட்டு ஜாலியா எடுத்துட்டு போ ஒன்னும் பிரச்சனையில்ல என்று கூறியப்படியே உள்ளே நடையை கட்டுகிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X