இப்போவே கையில கப்பு இருக்கு.. என்ன சொல்லுவீங்க சொல்லுங்க.. ஃபைனல்ஸுக்கு ட்ரையல் பார்த்த கமல்!
சென்னை: ஹவுஸ்மேட்ஸ் கையில் இப்போதே கப் இருப்பது போல் நினைத்து பேசுமாறு கூறினார் கமல்.
வரும் ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 6 போட்டியாளர்கள் பிக்பாஸின் ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்துள்ளனர்.

ஆரிக்கே அதிக வாய்ப்பு
இவர்களில் யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பது வரும் ஞாயிற்றுக் கிழமை தெரிந்துவிடும். இதுவரை ஆரிக்கே அதிக ஆதரவு உள்ளது, வாரம் தோறும் அவர் பெறும் வாக்குகளும் முதல் ஆளாய் அவர் சேவ் ஆவதிலுமே தெரிகிறது.

ஆரிக்கே டைட்டில்..
மேலும் கமல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களிலும் பொதுமக்கள் ஆரியின் பெயரை கூறி அதிர வைத்து வருகின்றனர். மக்களின் ஓட்டு அடிப்படையில் கொடுத்தால் ஆரிக்கே டைட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பு கையில இருக்கு..
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய கமல், உங்கள் எல்லோரையும் வெற்றியாளராகதான் பார்க்கிறேன். உங்கள் கையில் இப்போதே கோப்பை இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள், வெற்றியாளராக என்ன சொல்வீர்கள் சொல்லிக் காட்டுங்கள் என்றார்.

நல்லது வரும்
அதன்படி முதல் ஆளாய் பேசிய ரியோ, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வீட்டுக்குள்ள இருக்கும் போது எனக்கே சில சமயம் நம்பிக்கை இல்லாம இருந்திருக்கு. வெளியே இருந்து நீங்க என்னை நம்பினதற்கு ரொம்ப நன்றி. அந்த நம்பிக்கையை லைஃப் முழுக்க காப்பாத்துவேன். இங்க எப்படி இருந்தேன் என்பதை கண்டிப்பா போய் திரும்ப பார்ப்பேன். ஏதாவது தவறு இருந்தால் அது என் வாழ்க்கை முழுக்க இனிமே வரவே வராது என்றார்.
நல்லது இருந்தா கண்டிப்பா லைஃப் முழுக்க வரும்

என்ன சொல்றதுன்னே தெரியல
அடுத்து பேசிய சோம் என்னை ஏற்றுக்கொண்ட எல்லா மக்களுக்கும் நன்றி. சோம சோமா அக்செப்ட் பண்ணதுக்கு நன்றி. இதுதான் நான் இந்த டைட்டிலுக்கு நன்றி என்ற அவர் சிரித்துக்கொண்டே கமலிடம் என்ன சொல்றதுன்னே தெரியல சார் என்று முடித்தார்.

நல்லதை மட்டும் எடுத்துக்குங்க
அடுத்து பேசிய ஆரி, நேர்மையா இந்த விளையாட்ட நான் விளையாடியிருக்கேன்னு நம்புறேன். இந்த வீட்டுல இருக்குறவங்க என்னை நம்பலன்னாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஓட்டுப்போட்டு அவங்கதான் இந்த கப்ப எனக்கு வாங்கி கொடுத்திருக்காங்க. என்கிட்ட இருந்த நல்லத இங்கே கொடுத்திருந்தா அதை மட்டும் எடுத்துக்குங்க. என்கிட்ட இருக்குற தவறை நானும் இங்கே விட்டுட்டு போகணும்னு நினைக்கிறேன். நீங்களும் எடுத்துக்காதீங்க என்றார்.

நானும் ஒரு ஆள்னு மதிச்சு
தொடர்ந்து பேசிய கேபி, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இங்கே என் வாழ்க்கையை வாழ்ந்துருக்கேன். என் வாழ்க்கையை மக்கள் பார்த்திருக்காங்க. நானும் ஒரு ஆள்னு மதிச்சு எனக்கு ஓட்டு போட்டுருக்காங்க. என்னை அக்செப்ட் பண்ணதுக்கே ரொம்ப நன்றி என்றார்.

போன வாரம்தான் தெரிஞ்சுது
அடுத்து பேசிய ஷிவானி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னை பிடிச்சு ஓட்டு பண்ண எல்லாருக்குமே ரொம்ப நன்றி. வெளியே போனாலே மக்கள் மனசுல எனக்கு இடம் இருந்தாலே அதை ஒரு பெரிய வெற்றியா நான் பார்க்கிறேன். போன வாரம்தான் தெரிஞ்சுது எனக்குள்ள இவ்ளோ எபிலிட்டி இருக்குங்கறது. அதை நான் தெரிஞ்சுக்க இத்தனை நாட்கள் என்னை வச்சுருந்ததுக்கு நன்றி என்றார்.

குறைகள திருத்திக்கணும்
அடுத்து பேசிய பாலாஜி, இங்கே நான் வந்ததுக்கு காரணமே நான் யாருன்னு எல்லாருக்கும் தெரியணும்னுதான். என் அடையாளத்துக்காகதான் நான் இங்கே வந்தேன். நான் இந்த கப்ப ஜெயிக்கப் போறேன்னு ஒரு நாளும் அந்த எண்ணத்துல நான் விளையாடல. அப்படி நினைச்சுருந்தா என் விளையாட்டே வேற மாதிரி இருந்திருக்கும். நான் நானா இருக்கதான் வந்தேன். குறைகள் இருந்தா திருத்திக்கணும் நிறைகள் இருந்தா எடுத்துக்கணும். அதை நான் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன் என்றார்.

சின்ன பலன்தான் இது
அடுத்து பேசிய ரம்யா ஒருத்தருக்கு நம்மல புடிச்சாலே சந்தோஷமா இருக்கும். பல கோடி பேருக்கு பிடிச்சு, இத்தனை வாரம் என்னை சேவ் பண்ணி வச்சதுக்கு நன்றிங்றது ரொம்ப சின்ன வார்த்தைதான். பிக்பாஸ் என்னோட கம்ஃபர்ட் ஸோனே கிடையாது. நான் ஒரு பிரைவேட் பர்சன்தான். என்னை புஷ் பண்ணி ஒவ்வொரு நாளும் விளையாடியிருக்கேன். அதற்கு கிடைத்த சின்ன பலனாதான் இதை நான் பார்க்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











