முதல் இடத்துக்கு அடித்துக் கொள்ளும் ஆரியும் ரியோவும்.. யாருக்கு கிடைத்தது? பரபரப்பு புரமோ!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் முதலிடத்திற்கு ரியோவும் ஆரியும் சண்டையிடும் காட்சி பரபரப்பை கிளப்பி உள்ளது.

பந்து பிடிக்கும் லக்சரி டாஸ்க் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக விளையாடி வருவது ரியோ தான்.

கடந்த முறை கிடைத்த முதலிடத்திற்கு மீண்டும் ஆரி போட்டியிடும் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி இருக்கிறது

தனித்தனியாக

தனித்தனியாக

கும்பலாக பந்தை பிடிக்கும் போது ஏகப்பட்ட சண்டைகள் நடைபெற்ற நிலையில், போட்டியாளர்களின் தனித் திறமையை வெளிக்காட்ட ஒவ்வொருத்தரும் தனித் தனியாக பந்தை பிடிக்கும் வாய்ப்பை இன்றைய நிகழ்ச்சியில் கொடுத்துள்ளனர் என்பதை முதல் புரமோவில் தெளிவாக காட்டியுள்ளனர். யாரு கில்லாடி என்பது இப்போது தெரிந்து விடும்.

தூங்காதே தம்பி பாடல்

தூங்காதே தம்பி பாடல்

இரண்டாவது புரமோவில் நடிகர் கமல்ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் இடம்பெற்ற தூங்காதே தம்பி தூங்காதே பாடலை போட்டு ஹவுஸ்மேட்களை பிக் பாஸ் எழுப்புவதும், ஒவ்வொரு போட்டியாளரும் பந்தை பிடிப்பதில் வெறி கொண்டு அலைவதுமாக, மீண்டும் ரேங்க் படி வரிசைப்படுத்தும் டாஸ்க்கும் அரங்கேறுகிறது.

முதலிடம் யாருக்கு

முதலிடம் யாருக்கு

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் முதலிடத்தை பெற ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. இரண்டாவது புரமோவிலே இதுதான் கார்னர் என கடுப்பான ரியோவிடம், ஆரி பேசும் பேச்சுக்கள் மூன்றாவது புரமோவிலும் இடம் பிடித்துள்ளது.

ஏன் இரிடேட் ஆகுறீங்க

ஏன் இரிடேட் ஆகுறீங்க

ரியோ ராஜ் வழக்கம் போல தனது முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு பேசிய நிலையில், ஏன் இவ்வளவு இரிடேட் ஆகி பேசுறீங்க, ஹெல்தியா பேசலாமே என ஆரி ரியோவை நல்லாவே கார்னர் பண்ணுவது போலத்தான் தெரிகிறது. அதற்கு பதில் அளித்த ரியோ, நீங்க தான் ஹெல்தியா பேசல எனக் கூறுகிறார்.

100 பர்சன்ட்

100 பர்சன்ட்

நான் என் கேம்ல 100 பர்சன்ட் கொடுத்தாலத்தான் முதலிடத்தை கேட்கிறேன் என ரியோ ராஜ் தனது வாதத்தை மேலும் வலுவாக வைக்க, அந்த ரெண்டு பெண்கள் விட்டதால் தான் நீங்க புடிச்சீங்க என ஆரி ரியோவை அடக்கும் விதமாகவே பேசுவது புரமோ 3ல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

டைட்டிலுக்காகவா?

டைட்டிலுக்காகவா?

ஆரியை இந்த வாரம் வில்லனாக காட்டி வெளியேற்றி விட்டு, ரியோவுக்கு டைட்டில் பட்டத்தை தூக்கிக் கொடுக்க விஜய் டிவி திட்டம் போடுகிறது என இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் திட்டத் தொடங்கி உள்ளனர். பால் கேட்ச் டாஸ்க்கில் ஆரியை விட ரியோ தான் நல்லா விளையாடினார், இந்த முறை அவருக்கு முதலிடத்தை கொடுப்பதில் தவறு இல்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X