நல்லா இருந்த க்ளவுஸ கிழிச்சு.. பிக்பாஸ் வீட்டில் முதல் ஆட்களாய் காப்பாற்றப்பட்ட இருவர் இவர்கள்தான்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்த 7 பேரில் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சுச்சி, அனிதா, ரியோ, பாலாஜி, சம்யுக்தா, சோம், ஆரி ஆகிய 7 பேர் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் எவிக்ஷன் நடைபெற உள்ளது. இதன் மூலம் 7 பேரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார்.

அதிகாரப்பூர்வமானது
மற்ற 6 பேரும் காப்பாற்றப்படுவார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சுச்சிதான் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டாலும் இன்றைய எபிசோடுதான் அதிகாரப்பூர்வமானது.

வித்தியாசமான முறையில்
இந்நிலையில் நாமினேஷனில் உள்ள 7 போட்டியாளர்களில் முதற்கட்டமாக நேற்றைய எபிசோடில் இரண்டு போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டனர். வாரம் தோறும் காப்பாற்றப்படும் போட்டியாளர்களின் பெயர்கள் வித்தியாசமான முறையில் அறிவிக்கப்படுகிறது.

க்ளவுஸ்க்குள்..
அந்த வகையில் நேற்றைய எபிசோடிலும் காப்பாற்றப்பட்ட போட்டியாளர்களின் பெயர்கள் வித்தியாசமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நன்றாக இருந்த க்ளவுஸ்களை கத்திரியை வைத்து கட் பண்ண சொன்னார் கமல்.

ஆரி காப்பாற்றப்பட்டார்
அதன்படி முதல் க்ளவுஸை சனம் ஷெட்டி கட் பண்ணினார். அதில் ஆரியின் பெயர் இருந்தது. தொடர்ந்து ஆரி காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல். அடுத்து வீட்டின் கேப்டனான ஆஜித் ஒருவரை காப்பாற்றினார்.

ரியோ சேவ்டு
இதற்காக அவரும் ஒரு க்ளவுஸை கிழித்தார். அதில் ரியோவின் பெயர் இருந்தது. ஆக, நேற்றைய எபிசோடில் ஆரியும் ரியோவும் காப்பாற்றப்பட்டனர். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவோம் என கூறி வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறினர்.


Click it and Unblock the Notifications











