சூப்பரான பெண்களின் போட்டோவுக்கு பின்னாடி.. ஆரி போன்ற ஆண்களின் உழைப்பு இருக்கத்தான் செய்கிறது!

சென்னை: சம்யுக்தா மாதிரியான சூப்பரான பெண்களின் போட்டோவுக்கு பின்னாடி, ஆரி போன்ற அசத்தலான ஆண்கள் தான் இருப்பார்கள் என பிக் பாஸ் ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

யமஹா ஃபேசினோ பைக் வித்தாச்சு, அடுத்து ஹுண்டாய் கார் விற்கலாம் வாங்க என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நேற்றும் ஒரு அற்புதமான விளம்பர டாஸ்க் கொடுக்கப்பட்டது.

நல்லவேளையாக இந்த முறை ஷிவானி, கேபி, ஆஜீத்தை நடுவர்களாக மாற்றி விட்டார் பிக் பாஸ். பலே கில்லாடி தான்.

ஆஜீத் கேபி ஜோடி அசத்தல்

ஆஜீத் கேபி ஜோடி அசத்தல்

என்ன தான் ஷிவானி நாராயணன் செம மாடலாக அழகாக இருந்தாலும், யமஹா ஃபேசினோ பைக் விற்கும் டாஸ்க்கில், ஆஜீத் கேபியின் அறிவும் ஸ்மார்ட்னஸும் அவர்களை சிறந்த ஜோடியாக்கி பரிசு கொடுத்தது. இந்நிலையில், அடுத்ததாக ஹுண்டாய் கார் நிறுவனம் தனது புதிய காரை பிக் பாஸ் வீட்டில் அறிமுகம் செய்தது.

ஷிவானி, கேபி, ஆஜீத் தான் நடுவர்

ஷிவானி, கேபி, ஆஜீத் தான் நடுவர்

எப்பவுமே ஃபேஷன் நிகழ்ச்சிகள் என்று வந்து விட்டால் இவங்களே ஸ்கோர் பண்றாங்களே என்பதை அறிந்து கொண்டு, உஷாராக பிக் பாஸ் இந்த முறை ஷிவானி, கேபி மற்றும் ஆஜீத்தை பிடித்து நடுவர்களாக போட்டு விட்டார். அதனால், மற்ற போட்டியாளர்களுக்கு தாராளமாக வாய்ப்பு கிடைத்தது.

செல்போன் கொடுத்தும்

செல்போன் கொடுத்தும்

போட்டோக்களை எடுக்க, இரண்டு ஸ்மார்ட் போன்கள் கொடுக்கப்பட்டது. சும்மா வீட்டுக்கு போன் பேசுவது போல ரியோ, சோமசேகர், நிஷா உள்ளிட்ட யாரும் நடிக்கக் கூட செய்யவில்லை. அவ்ளோ புரஃபஷனலா கேம் ஆடுறாங்களாம். ஒருவேளை சிம் கார்டே போடாம போன் கொடுத்திருப்பாங்களோ?

சிறந்த போட்டோவுக்கு பரிசு

சிறந்த போட்டோவுக்கு பரிசு

இரண்டு பேர் கொண்ட ஜோடியில் ஒருவர் போஸ் கொடுக்கணும், ஒருத்தர் போட்டோ எடுக்கணும் என சூப்பரான போட்டியை வைத்தார்கள். சிறந்த போட்டோ எடுக்கும் ஜோடிக்கு சூப்பரான பரிசும் காத்திருந்தது. ஒவ்வொரு டீமும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துப் போட்டனர்.

ஆரி அசத்தல்

ஆரி அசத்தல்

ஒவ்வொரு சூப்பரான பெண்களின் போட்டோவுக்கு பின்னாடியும் ஆரி போன்ற அசத்தலான ஒரு ஆண் கேமராமேன் இருப்பார் என பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு சம்யுக்தாவையும், ஹுண்டாய் காரையும் நல்லாவே படம் பிடித்து அசத்தினார் ஆரி அர்ஜுனா. ஆரியின் ஆர்மியினர் சமூக வலைதளத்தில் அதனை ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நிஷா பண்ண காமெடி

நிஷா பண்ண காமெடி

கார் பக்கத்தில் நின்று ஸ்டைலாக போஸ் கொடுக்க சொன்னால், நிஷா அக்கா பப்பரப்பான்னு சோறு திங்கிற மாதிரி அதுவும் ஒரு காலை நீட்டிக் கொண்டு நிஷா போஸ் கொடுக்க, பாவம் நமக்கு எப்பவுமே இதே ஜோடி தானா? என ரியோ அழுது கொண்டே போட்டோ எடுத்து போட்டு இருந்தார்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
யார் வின்னர்

யார் வின்னர்

ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, சோமசேகர், ரியோ, நிஷா, ஆரி, சம்யுக்தா, அனிதா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த போட்டியில், அழகா போட்டோ எடுத்து தனது திறமையை காட்டிய ஆரி சம்யுக்தா ஜோடி தான் வின்னர் ஆனார்கள். ஸ்பெஷல் கிஃப்டும் கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X