இந்த சண்டை நல்லா இருக்கே.. வாதாட வந்த இடத்தில் சொந்த வாய்க்கா தகராறு.. அனல் பறந்த பிக் பாஸ் வீடு!
சென்னை: பாலாஜி சனம் ஷெட்டியின் சண்டையை விட நேற்று பிக் பாஸ் வீட்டில் அனல் பறந்தது இவங்க இரண்டு பேரோட சண்டை தான்.
சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பேச வந்த ஆரிக்கும், பாலாஜி முருகதாஸுக்கு ஆதரவாக பேச வந்த சம்யுக்தாவுக்கும் இடையே தான் செம வாக்குவாதம்.
இதுவரை அமைதியாக கருத்துக்களை மட்டுமே எடுத்து வைத்த ஆரி, இம்முறை கடுப்பாகி கோபத்தையும் நல்லாவே கொட்டித் தீர்த்தார்.

தறுதலை வழக்கு
நீதிபதியாக சுசித்ரா நேற்றைய எபிசோடில் இருந்த நிலையில், சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸின் தறுதலை மற்றும் பின்னாடி உதைத்த வழக்கு வந்தது. இருவருக்கும் ஆதரவாக பேச விரும்புவர்கள் வரலாம் என சுச்சி அனுமதி கொடுத்ததும், சனம் ஷெட்டிக்கு ஆதரவாக ஆரி, ரம்யா பாண்டியன், அனிதா உள்ளிட்டோர் வந்தனர். பாலாவுக்கு ஆதரவாக சம்யுக்தா, அர்ச்சனா, ஷிவானி என ஒரு பெரிய கூட்டமே வந்தது.

ஆரிக்கும் சம்யுக்தாவுக்கும் சண்டை
ஆதரவாளர்களாக வாதாட வந்த இடத்தில் தங்களின் சொந்த பிரச்சனையை எடுத்து பேசி இருவரும் போட்ட சண்டை தான் நேற்று பிக் பாஸ் வீட்டில் அனல் பறந்தது. நடிகர் ஆரியும், முன்னாள் மாடல் அழகியுமான சம்யுக்தா இருவரும், ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என்கிற ரேஞ்சுக்கு சண்டை போட்டனர்.

தலைவர் தேர்வில் மோசடி
பாலாஜி முருகதாஸ், தனது பந்துகளை எல்லாம் உங்களுக்கு கொடுத்து, உங்களை இந்த வாரம் இந்த வீட்டின் தலைவர் ஆக்கியதால் தான் நீங்க அவருக்கு ஃபேவரா பேச வந்தீங்கன்னு ஆரி, சரியான இடத்தில் கை வைத்ததும், சூடான சம்யுக்தா பாப்கார்ன் போல வெடிக்கத் தொடங்கி விட்டார்.

இது நல்லா இருக்கே
இதுவரை பிக் பாஸ் வீட்டில் பாலாவுக்கும் சனம் ஷெட்டிக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும், பாலவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே நடந்த சண்டைகளை விட சம்யுக்தா ஆரி சண்டை அட்டகாசமாக இருக்கே, வார்த்தைகளாலே இருவரும் அடித்துக் கொள்வது போல பண்றாங்களே என பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கத் தொடங்கி விட்டனர்.

தனி வழக்கு
முன்னதாக கன்ஃபெஷன் ரூமில் ஆரி மற்றும் சம்யுக்தா இருவரும் மாற்றி மாற்றி தங்களின் குற்றச்சாட்டுக்களை எடுத்து வைத்துள்ளனர். நேற்று இரண்டு வழக்குகள் நடைபெற்ற நிலையில், இன்று ஆரி - சம்யுக்தாவின் ரியல் கேஸ் நீதிமன்றத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்யுக்தாவுக்கு ஆதரவு கொடுக்க ஒரு கூட்டமே இருக்கும். ஆரிக்கு யார் ஆதரவு தர போறங்கன்னு பார்ப்போம்.


Click it and Unblock the Notifications