Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஆரி, அனிதா, சனம் ஆகியோர் சேர்ந்து எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 17 ஆம் தேதி நிறைவடைந்தது. 105 நாட்கள் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில் 18 பேர் பங்கேற்றனர்.
சண்டைகளும் சர்ச்சைகளும் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் இதன் ஃபைனலிஸ்டுகளாக ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா, சோம் ஆகிய 5 பேர் தகுதி பெற்றார்கள்.
ஆரி வெற்றியாளர்
கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இதன் ஃபினாலேவில் ஆரி வின்னர் ஆனார். பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனார். ஆரி வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்ட போது சனம் ஷெட்டி மற்றும் அனிதாவை தவிர மற்ற ஹவுஸ்மேட்களின் முகத்தில் ஈயாடவில்லை.
சேர்ந்து எடுத்த போட்டோஸ்
அவர்கள் இருவரும் எழுந்து நின்று கைகளை தட்டி ஆரவாரம் செய்யும் போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது. மேலும் ஆரி ட்ரோஃபியுடன் இருக்கும்போது அவருடன் சேர்ந்து இருவரும் போட்டோக்களை எடுத்துக்கொண்டனர்.
பிக்பாஸ் கொண்டாட்டம்
இதனை பார்த்த நெட்டிசன்கள் பெஸ்ட் ட்ரியோ என புகழ்ந்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் காட்சியாக்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற பிரபலங்கள் அனைவருமே பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸில் பங்கேற்றபோது
இதுதொடர்பான போட்டோக்களை அனிதா சம்பத்தும் சனம் ஷெட்டியும் ஏற்கனவே தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து ஹின்ட் கொடுத்திருந்தனர். இந்நிலையில் அனிதா சம்பத், பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
உண்மையான நண்பர்கள்
அந்த போட்டோவுக்கு பிக்பாஸ் கொண்டாட்டம் மீட் அப் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் அனிதா சம்பத். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பெஸ்ட் ட்ரியோ என்றும் உண்மையான நண்பர்கள் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
நாங்கள் மறக்கவில்லை
இதேபோல் சனம் ஷெட்டியும் அதே போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், பெஸ்ட் த்ரீ என்று புகழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் நீங்களும் அனிதாவும் ஆரியிடம் சண்டை போட்டதை நாங்கள் இன்னமும் மறக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.