twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி

    |

    சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரி யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என மேடையில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

    Recommended Video

    Best of BIGG BOSS 4 Finale | Aari Title Winner | Kamal Hassan Gifts | - FilmibeatTamil

    கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

    நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் ஃபினாலே கொண்டாட்டம் நள்ளிரவு 12 மணி வரை சென்றது.

    கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!

    முந்தைய சீசன் பிரபலங்கள்

    முந்தைய சீசன் பிரபலங்கள்

    பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்டுகளாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகியோர் பினாலேவுக்குள் சென்றனர். இந்நிலையில் ஃபினாலேவில் ஒரு வின்னர் ஒரு ரன்னர் அப் மட்டுமே என்பதால் சோம், ரம்யா, ரியோ என மூன்று பேரும் முந்தைய சீசன் பிரபலங்களால் வெளியே அழைத்து வரப்பட்டனர்.

    கதர் ஆடை உடுத்தி..

    கதர் ஆடை உடுத்தி..

    இறுதியாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த ஆரியையும் பாலாஜியையும் கமலே நேரடியாக சென்று அழைத்து வந்தார். கதர் ஆடையையும் கொடுத்து உடுத்தி வர சொன்ன கமல், அவர்களை ஜக ஜோதியாக வெளியே அழைத்து சென்றார்.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    பின்னர் பெரும் சஸ்பென்ஸுக்கு பிறகு வின்னரை அறிவித்தார் கமல். தான் வின்னர் என்று கேட்டதும் கண்கள் கலங்கிய ஆரி உருக்கமாக பேசினார். அதாவது, உங்களின் அனுமதியுடன் நான் இரண்டு பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கமலிடம் கூறினார்.

    மேடையில் விழுந்து மன்னிப்பு

    மேடையில் விழுந்து மன்னிப்பு

    தொடர்ந்து பேசிய ஆரி, பேச்சாலும் உடல்மொழியாலும் என்னுடைய செயலாலும் உங்களை காயப்படுத்தியிருந்தால் உங்களிடம் உங்கள் குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என மேடையில் விழுந்து மக்களிடமும் சக போட்டியாளர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

    5ஆம் வகுப்புக்கு பிறகு

    5ஆம் வகுப்புக்கு பிறகு

    சக போட்டியாளர்கள் இல்லாவிட்டால் தான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்றும் கூறினார். மேலும் 5ஆம் வகுப்புக்கு பிறகு நான் முதல் இடம் வாங்கவே இல்லை. இப்போது முதல் ரேங்க் வாங்கி முதல் இடத்திற்கு வந்துள்ளேன். கப்பு கொடுத்திருக்கிறீர்கள்.

    கமலின் காலில் விழுந்து

    கமலின் காலில் விழுந்து

    ஆனால் ரேங்க் கார்டில் கையெழுத்து போடும் அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை. நான் முதலிடம் பெற்றால் அதனை பார்த்து சந்தோஷப்படும் அவர்கள் இல்லை. ஆகையால் உங்களையும் எனக்கு வாக்களித்த மக்களையும் என் அப்பா அம்மாவாக நினைத்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன் என்று கமலின் காலில் விழுந்தார் ஆரி.

    நியாம்னா நிமிர்ந்து கேள்

    நியாம்னா நிமிர்ந்து கேள்

    இதனை தொடர்ந்து ஆரிக்கு டைட்டில் வின்னர் ட்ரோஃபியை கொடுத்த கமல், இந்த கப்பை நானே வாங்கியது போன்ற பெருமை கொள்கிறேன் என்றார். அப்போது பேசிய ஆரி, நீங்கள் கூறினீர்கள் தப்புன்னா தட்டிக்கேட்பேன், நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன் என்று, அதேபோல் தப்புன்னா தட்டிக் கேளுங்க நியாயம்னா நிமிர்ந்து கேள் என மக்களுக்கு கூறினார்.

    மோட்டிவேட்டர் ஆரி

    மோட்டிவேட்டர் ஆரி

    அதன் தொடர்ச்சியாக மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்ததை போன்றே ஆரிக்கும் பிக்பாஸின் விருது கொடுக்கப்பட்டது. மோட்டிவேட்டர் ஆரி என்ற விருது ஆரிக்கு வழங்கப்பட்டது. மேலும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பரிசாக 50 லட்சம் ரூபாய் அவருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

    English summary
    Aari apologized to house mates and public by knee down in the Biggboss finale stage. Aari breaks down after knowing he is the winner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X