உங்களை எந்த நேரத்திலும் தவறாக பேசவில்லை.. அனிதா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட ஆரி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி தனது குடும்பத்தை பற்றி தவறாக பேசியதாக காட்ட முயற்சித்தார் அனிதா. இதனை தொடர்து ஆரி அனிதாவின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டார்.

Recommended Video

சென்னை: பேசாதீங்க.. கையை நீட்டி… உதட்டை கடித்து.. ஆரியை மிரட்டிய அனிதா… கடுப்பில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனிதா நடந்து கொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டாஸ்க்கின் போது ஆரி என்ன சொல்ல வருகிறார் என்றே கேட்காத அனிதா தனது குடும்பத்தை பற்றி பேசக் கூடாது என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.

கைகளை நீட்டி..

கைகளை நீட்டி..

ஆரி, நான் சொல்ல வருவதை கேட்டுவிட்டு பேசுங்கள் என்று கூறிய போதும் கூட அதுவரைக்கும் என்னால் வெயிட் பண்ண முடியாது என்று கூறிவிட்டு கேவலமாக நடந்து கொண்டார். கைகளை ஆட்டியும் உதட்டைக் கடித்தும் அவர் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

ஆரியை வெளியேற்ற டிராமா

ஆரியை வெளியேற்ற டிராமா

இதனை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா குடும்பத்தை பற்றி பேசியதால் தான் நிஷா வெளியேற்றப்பட்டார் என்று நினைத்துள்ள அனிதா, தனது குடும்பத்தை பற்றி பேசினார் என்று கூறி ஆரியை வெளியேற்றிவிடலாம் என்ற திட்டத்தில் ஓவர் ரியாக்ஷன் பண்ணியதாக விளாசி வருகின்றனர்.

மொத்த ஹவுஸ்மேட்ஸும்..

மொத்த ஹவுஸ்மேட்ஸும்..

அனிதா ஆரியிடம் நடந்து கொண்ட விதம் ஒட்டு மொத்த பிக்பாஸ் ரசிகர்களையும் கோபப்படுத்தியுள்ளது. ஆரியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்திலேயே அனிதா மற்றும் அனைத்து ஹவுஸ்மேட்ஸும் ஆரியிடம் இப்படி நடந்து கொள்வதாக கூறி வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட ஆரி

மன்னிப்பு கேட்ட ஆரி

இந்நிலையில் நேற்றைய எபிசோடின் இறுதியில் அனிதா குடும்பத்தாரிடம் ஆரி மன்னிப்பு கேட்டார். கார்டன் ஏரியாவில் உள்ள கேமரா முன்பு பேசிய ஆரி, இன்றைய டாஸ்க்கில் எனக்கும் அனிதாவுக்கும் இடையே சின்ன பிரச்சனை ஏற்பட்டது.

மன்னிப்பு கேட்கிறேன்

மன்னிப்பு கேட்கிறேன்

அவரது குடும்பத்தை பற்றி நான் தவறாக பேசியதாக அனிதா புரஜெக்ட் பண்ணினார். நான் தவறாக பேசவில்லை. இதை அவரிடம் சொல்லி மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். ஆனால் அதையும் நான் ஸ்கோர் பண்ண நினைக்கிறேன் என்று கூறுவார் என்பதால் அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

மேலும் எந்த நேரத்திலேயும் நான் உங்களை தவறாக பேசவில்லை என்று கூறினார். ஆரி கேமரா முன்பு அனிதா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதை பார்த்த ரசிகர்கள், நீங்கள் எதுவும் தவறாக பேசவில்லை, உங்களை பேசவும் விடவில்லை எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள், அனிதவின் மோசமான நடத்தைக்காக அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X