பிக் பாஸ் ரியோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஆரி.. அன்பு கேங் என்ன பண்ணாங்கன்னு தெரியுமா?

சென்னை: நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ரியோ ராஜுக்கு டைட்டில் வின்னர் ஆரி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், ரியோ ராஜ் மற்றும் டிடி நீலகண்டன் என மூன்று நண்பர்களும் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், சிலரை தவிர ஏகப்பட்ட சக போட்டியாளர்கள் ரியோவுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து கூறியதாக தெரியவில்லை.

சிவகார்த்திகேயனை போலவே

சிவகார்த்திகேயனை போலவே

சாதாரண குடும்பத்தில் இருந்து விஜய் டிவியில் சேர்ந்து இன்று கோலிவுட்டின் முன்னணி நாயகனாக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயனை போலவே சன் டிவியில் விஜேவாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ ராஜ்.

ரியோவை வாழ்த்திய ஆரி

ரியோவை வாழ்த்திய ஆரி

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் சக போட்டியாளரான ரியோ ராஜின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ஆரி அர்ஜுனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே புரோ ரியோ ராஜ் என வாழ்த்தி உள்ளார். ரியோவின் ரசிகர்களும், ஆரியின் ரசிகர்களும் ரியோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துக்கள் தம்பி

வாழ்த்துக்கள் தம்பி

ஆரி வாழ்த்திய நிலையில், அன்பு கேங்கும் சும்மா இல்லை, பாசமான தம்பி ரியோவை அன்பு அக்கா நிஷா நேற்று இரவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ போட்டு வாழ்த்தி விட்டார். "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி.. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்" என வாழ்த்தி உள்ளார்.

டபுள் வாழ்த்து

டபுள் வாழ்த்து

ரியோவும் டிடியும் இருக்கும் போட்டோவை போட்டு இருவருக்கும் சேர்த்து அர்ச்சனா பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இரண்டு நல்ல உள்ளங்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல ஆயிரம் முகங்களில் சிரிப்பை கொண்டு வரும் நீங்க இருவரும் நீண்ட காலம் நல்லா இருங்க என அன்பு அன்னை வாழ்த்தி உள்ளார்.

கண்டுக்கவே இல்லை

கண்டுக்கவே இல்லை

மற்றபடி அன்பு கேங்கை சேர்ந்த சோமசேகர், கேபி, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தியதாக தெரியவில்லை. மேலும், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் உள்ளிட்டோரும் ரியோவுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. ரியோவுக்கு ரியல் பாசம் எதுவென்று நன்றாகவே புரிந்திருக்கும்.

சிவகார்த்திகேயனுடன்

சிவகார்த்திகேயனுடன்

Now or Never என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஒரே நிற உடையை சிவகார்த்திகேயனும், ரியோ ராஜும் அணிந்து கொண்டு நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அண்ணே, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ரியோ சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதே போல டிடிக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரியோ ராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X