ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை?

சென்னை: முதல் புரமோவில் ஹவுஸ்மேட்களை எதிர்த்து பேசி பர்ஃபார்ம் பண்ணினாலும், இந்த முறையும் பிக் பாஸ் ஆரிக்கு ஆதரவாக இல்லாமல், அவரை ஜெயிலுக்குள் அனிதாவுடன் சேர்த்து பூட்டி விட்டார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 26ம் நாளின் 2வது புரமோவிலும், ஆரிக்கும் அர்ச்சனாவுக்கும் நல்லாவே சண்டை நடக்குது.

சண்டையே போட்டாலும், தன் பக்கம் இருக்கும் நியாயத்தையே ஆரி எடுத்து வைப்பது அவருடைய ஒரிஜினாலிட்டியை காட்டுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

செகண்ட் டைம்

செகண்ட் டைம்

பிக் பாஸ் வீட்டின் கண்ணாடி சிறையில் முதலாவதாக ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் போனார்கள். அதன் பின்னர் ஆரி மற்றும் ஆஜித் சென்றார்கள். இன்றைய எபிசோடில் அனிதா சம்பத் மற்றும் ஆரி கண்ணாடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகர் ஆரிக்கு இது செகண்ட் டைம்.

அப்செட்டான ஆரி

அப்செட்டான ஆரி

ஆஜீத், கேபி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன் என இந்த சீசனில் ஏகப்பட்ட போட்டியாளர்கள் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்களாகத் தான் ஏகப்பட்ட நேரங்களில் இருக்கின்றனர். ஆனால், அவர்களை எல்லாம் விட்டு விட்டு, தன்னையும் அனிதா சம்பத்தையும் வஞ்சத்தின் காரணமாக டார்கெட் செய்வதை கண்ட ஆரி ரொம்பவே அப்செட் ஆகிட்டார்.

சோத்து பிரச்சனை

சோத்து பிரச்சனை

ஆரிக்கும் ஆஜீத்துக்கும் நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்தே ஏழாம் பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனாலும், ஆஜீத்தை கவனித்துக் கொள்வதில் ஆரி தொடர்ந்து அக்கறை செலுத்தியே வருகிறார். சாப்பாடு போடும் விஷயத்தில், ஆஜீத்துக்கும் கம்மியா போட்டுட்டாருன்னு, அர்ச்சனா மூக்கை நுழைத்த விஷயம் ஆரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை இந்த இரண்டாவது புரமோ காட்டுகிறது.

திணிக்காதீங்க

திணிக்காதீங்க

பிக் பாஸே தான் என நினைத்துக் கொண்டு அர்ச்சனா அந்த வீட்டில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு எப்பவோ உருவாகி விட்டது. அதை மீண்டும் ஒரு முறை கன்ஃபார்ம் பண்ணும் விதமாக இந்த புரமோ அமைந்துள்ளது. என் கிட்ட உங்க விஷயத்தை திணிகாதீங்க என அர்ச்சனாவின் மூக்கை உடைத்து விட்டார் ஆரி.

ஆஜீத்துக்கும் மம்மியா

ஆஜீத்துக்கும் மம்மியா

தாய் பாசத்துல அர்ச்சனா அன்னை தெரசாவையே ஓவர் டேக் பண்ணிடுவார் போல தெரிகிறது. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்க பாலாவும் தனக்கு புள்ளையாம். சம்யுக்தாவுக்கு மகனாக இருக்கும் ஆஜீத்துக்கும் இப்போ அதிக சோறு போட்டு தனது தாய் பாசத்தை பொழிந்து மடக்கப் பார்க்கிறார். அம்மா சென்டிமென்ட்டை வச்சு அர்ச்சனா கேம் ஆடுறாங்க என ரசிகர்கள் கண்டு பிடித்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X