சிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ஏகப்பட்ட விளம்பர டாஸ்க்குகள் வந்து கொண்டே இருக்கின்றன.

Recommended Video

Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil

நேற்றைய நிகழ்ச்சியில், ஹமாம் விளம்பர டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. நல்ல வேளையாக ஹவுஸ்மேட்களை நடு ஹாலில் குளிக்க சொல்லி டாஸ்க் ஏதும் கொடுக்காமல் சிலம்பம் டாஸ்க் கொடுத்து பாராட்டுக்களை அள்ளியது.

சிறையில் இருந்து கொண்டே ஆரி சிலம்பம் கொடுத்தது சிறப்பு.

ஹமாம் விளம்பரம்

ஹமாம் விளம்பரம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 லேட்டா ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க தொடர்ந்து விளம்பர டாஸ்க்குகளாக குவிந்து கொண்டே வருகின்றன. போட்டியாளர்களும் வேற வழியில்லாமல் பிக் பாஸ் சொல்றதை எல்லாம் கேட்டு அப்படியே தலையாட்டிக் கொண்டே ஒவ்வொரு டாஸ்க்குகளையும் செய்து வருகின்றனர். நேற்று ஹவுஸ்மேட்களுக்கு ஹமாம் சோப்பு நிறுவனம் சிலம்பம் சுற்றும் சூப்பரான டாஸ்க்கை கொடுத்தது.

நடுவர்கள் யார்?

நடுவர்கள் யார்?

அர்ச்சனா மற்றும் சோமசேகரை இந்த போட்டியின் நடுவராக நியமித்தனர். சிலம்பம் டாஸ்க்கிலும் ஜோடிகளை போட்டு, தற்காப்பு கலைகளை ஊக்குவித்தனர். பிளாஸ்மா டிவியில் சிலம்பம் பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்கிற சிலம்பம் மாணவர்களின் அதிரடியான வீடியோவும் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

கை விளையாடுது சிலம்பத்துல

கை விளையாடுது சிலம்பத்துல

மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்னா சும்மாவா, சும்மா சிலம்பத்தை கையில் எடுத்துக் கொண்டு சோமசேகர் சுழற்றியதை பார்த்து, ஹவுஸ்மேட்கள் அரண்டு போய்விட்டனர். யார் மேலயாவது அடி விழுந்துடுமோ என்கிற அச்சத்திலேயே ஆடாமல் அசையாமல் போட்டியாளர்கள் உட்கார்ந்து இருந்தனர்.

இதுலயும் அவங்கதான் ஜோடி

இதுலயும் அவங்கதான் ஜோடி

டான்ஸ் போட்டின்னா பரவாயில்லை. சிலம்பம் போட்டியிலையும் பாலாஜியும் ஷிவானியும் ஜோடியானதை பார்த்து ரசிகர்கள் அப்செட் ஆனாலும், வேற வழியில்லை என்பது போல அதனை விட்டு விட்டனர். இரண்டு பேருக்குமே சிலம்பம் சுற்ற கொஞ்சம் கூட வரவில்லை என்பது வேற கதை.

வென்றது யார்?

வென்றது யார்?

அனிதாவும் ரம்யா பாண்டியனும் ஒரு அணியாக இணைந்து ஆரம்பமே அசத்தலாக சிலம்பம் டாஸ்க்கில் சோமசேகர் சொல்லிக் கொடுத்ததை விட ரொம்ப நல்லாவே பண்ணாங்க, நிஷா, கேபி மாதிரி சிரித்துக் கெடுக்காமல், ஒவ்வொரு அசைவையும் அழகா பண்ணிய அந்த அணியையே அர்ச்சனாவும் சோமும் சேர்ந்து வெற்றியாளர்கள் என அறிவித்தனர். சிறப்பு பரிசும் கொடுக்கப்பட்டது.

சிறையிலும் சிங்கம் தான்

சிறையிலும் சிங்கம் தான்

ஈடுபாடு குறைவான போட்டியாளர் என ஆரி அர்ஜுனாவை சிறைக்கு அனுப்பினாலும், சோமசேகர் முதலில் ஆரியிடமே வந்து சிலம்பம் சுற்றும் பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டர். அந்த மனுஷனின் ஈடுபாடு சிறையிலும் சூப்பராக இருக்கிறது என்றும், சிறையிலும் அவர் சிங்கம் தான் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மற்றவர்கள் மாதிரி கண்ணாடி அறையில் தூங்கி வழியவில்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X