திருவண்ணாமலை கிரிவல பாதையில் திடீரென பிக் பாஸ் டைட்டில் வின்னர் செய்த காரியம்.. குவியுது பாராட்டு!
சென்னை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் நடிகர் ஆரி அர்ஜுனன் ஏழைகளுக்கு நேற்று அன்னதானம் வழங்கி உள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டில் வின்னரான ஆரி ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையை நடத்தி வரும் நடிகர் ஆரி தனது அறக்கட்டளை சார்பாக இந்த அன்னதான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

நயன்தாராவுடன்
ஆடும் கூத்து படத்தின் மூலம் 2005ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆரி. ரெட்டச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த ஆரிக்கு 2015ல் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து மாயா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் டைட்டில்
நேர்மையாக விளையாடுகிறேன் என்பதை முன் நிறுத்தி வீட்டில் இருந்த அனைவருடனும் என்ன பிரச்சனை வந்தாலும் கலங்காமல் துணிச்சலோடு எதிர்கொண்ட ஆரிக்கு வெளியே மக்கள் சப்போர்ட் பெருகியது. அதிகபட்சமான ஓட்டு வித்தியாசத்தில் பிக் பாஸ் டைட்டிலையும் வெற்றிக் கொண்டார் ஆரி.

கிரிவல பாதையில்
இந்நிலையில், நேற்று திடீரென திருவண்ணாமலை கிரிவல பாதையில் நடிகர் ஆரி ஏழை எளிய மக்களுக்கு மற்றும் கிரிவலம் வந்த மக்கள் என சுமார் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி உள்ளார். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஆரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நல்ல மனது
பிக் பாஸ் பிரபலங்களான ஐஸ்வர்யா தத்தாவுடன் ஒரு படம், லாஸ்லியாவுடன் ஒரு படம் என அரை டஜன் படங்கள் ஆரி நடிப்பில் ரிலீசுக்காகவும் படப்பிடிப்பு பணிகளுக்காகவும் காத்திருக்கின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கு இந்த கொரோனா காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளை தனது அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார்.

ஆரியின் வெற்றிக்கு
சமீபத்தில் ஆரியின் வெற்றிக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என தயாரிப்பாளரும் விமர்சகருமான ரவீந்திரன் பேசிய ஆடியோவை அனிதா சம்பத் வெளியிட்டு இருந்தார். பிக் பாஸ் 4 முடிந்த 6 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், மீண்டும் கிளம்பிய சர்ச்சை சில தனிப்பட்ட முறையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அப்படியே அடங்கிப் போனது.
Recommended Video

தர்ஷா குப்தா
கொரோனா காலத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு தொடர்ந்து குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா உதவி வருகிறார். தினமும் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு சென்று சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கும் உணவு வழங்கியும் மீனவ மக்களுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கி பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications