பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டிவிட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னரான ஆரி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று நடைபெற்றது. இதில் ஆரி வின்னராக அறிவிக்கப்பட்டார்.
ஃபேன் பேஸ் என்று பெரிதாக எதுவும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஆரி, அதன்பிறகு தனது நடத்தையாலும் பர்ஃபாமன்ஸாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

கார்னர் செய்யப்பட்ட ஆரி
முழுக்க முழுக்க குரூப்பிஸம் நிறைந்த பிக்பாஸ் வீட்டில் அனைத்து ஹவுஸ்மேட்டாலும் கார்னர் செய்யப்பட்டார் ஆரி. ஆரி வாயை திறந்தாலே அவரிடம் எகிறினர் ஹவுஸ்மேட்ஸ். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ஆரி.

தீர்மானித்த ரசிகர்கள்
இருந்த போதும் மன உறுதியுடன் விளையாடி வந்தார். இதனாலேயே பலரின் ஃபேவரைட் கன்டெஸ்டென்ட் ஆனார் ஆரி அர்ஜுனன். பிக்பாஸ் வீட்டில் தன்னை விட வயதில் சிறியவர்களால் பெரும் அவமானங்களை சந்தித்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் ஆரியைதான் வின்னர் ஆக்க வேண்டும் என தீர்மானித்தனர்.

அள்ளிக்கொட்டிய ரசிகர்கள்
வாரம்தோறும் ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்படும் ஆரியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல் நபராய் காப்பாற்றினர் ரசிகர்கள். இந்நிலையில் ஃபினாலேவுக்குள் டாப் 5 ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராக இருந்த ஆரிக்கு வாக்குகளை அள்ளிக் குவித்தனர்.

மகுடம் சூடிய ஆரி
அதன்படி ஆரி அர்ஜூனன் 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை தட்டிச் சென்றார். அவருக்கு அடுத்தப்படியாக 6 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பாலாஜி ரன்னர் அப் ஆனார். 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் பிக்பாஸ் சீசன் 4 மகுடத்தை சூடினார் ஆரி.

ஆரி முதல் டிவிட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்ற பிறகு முதல் முறையாய் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் ஆரி. அதில் பிக்பாஸ் ட்ரோஃபியுடன் போஸ் கொடுத்துள்ள ஆரி, எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே.. என குறிப்பிட்டுள்ளார்.

பெருமை உங்களுக்கே..
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ஆரியின் பதிவை பார்த்த இந்த ரசிகர், உங்களுக்கு வாக்களித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும்! மக்களின் வெற்றி.. பிக்பாஸை வெறுத்த புதிய மக்களை பிக்பாஸ் பார்க்க வைத்த பெருமையும் உங்களுக்கே! என பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தில் ஒருவராய்..
மற்றொரு ரசிகரான இவர், நாம் ஜெயித்துவிட்டோம் அண்ணா.. உங்கள் நேர்மை.. உங்கள் கடின உழைப்பிற்கும், உங்கள் பொறுமைக்கும், உங்கள் குணத்திற்கும் உங்கள் சிந்தனைக்கும் கிடைத்த வெற்றி.. உங்களுடன் எப்போதும் நாங்கள் இருப்போம் அண்ணா.. எங்கள் குடும்பத்தில் ஒருவராய் பார்க்கிறோம் உங்களை..


Click it and Unblock the Notifications











