மீட் பண்ணலாமா.. வேட்டி சட்டையில்.. எவ்ளோ அழகா இருக்காரு.. வைரலாகும் ஆரி அர்ஜுனன் போட்டோ!

சென்னை: ஹீரோயின்களுக்கு நிகராக சில நேரங்களில் ஹீரோக்கள் பதிவிடும் போட்டோக்களும் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை வாரிக் குவிக்கும்.

பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், சின்ன சின்ன குழுக்களாகவும் மொத்த குரூப்பாகவும் பிக் பாஸ் போட்டியாளர்கள் இருக்கும் போட்டோக்கள் இணையத்தை கலக்கின.

இந்நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனன் தனி ஒருவனாக வேட்டி சட்டையில் மின்னும் போட்டோ வைரலாகி வருகிறது.

விரைவில் விஜய் டிவியில்

விரைவில் விஜய் டிவியில்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெகு விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் குழுவாக எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

சோமுடன் ரம்யா

சோமுடன் ரம்யா

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியனுக்கும் சோமசேகருக்கும் லவ் டிராக்கை ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர். சோமசேகரும் ரம்யாவும் இணைந்து ஏகப்பட்ட போட்டோக்களையும் எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி உள்ளனர். சோம்யா என ஒரு பக்கம் அடுத்த கவிலியா டிராக்கை பிக் பாஸ் ரசிகர்கள் ஓட்டி வருகின்றனர்.

ஷிவானியுடன் பேசினாரா

ஷிவானியுடன் பேசினாரா

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மொத்த போட்டியாளர்களும் குழுவாக இருக்கும் போட்டோவில் ஷிவானி அருகே பாலா இல்லாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பாலாவும் ஷிவானியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு பேசினார்களா இல்லையா என்பதை பார்க்கவே நிகழ்ச்சிக்கு ரொம்பவே ரசிகர்கள் வெயிட் செய்து வருகின்றனர்.

அர்ச்சனாவின் அன்பு கேங்

அர்ச்சனாவின் அன்பு கேங்

இன்னொரு புறம் அர்ச்சனாவின் அன்பு கேங், நாங்க அப்படித்தான் கேங்கா இருப்போம், நீங்க என்ன வேணா சொல்லி கிண்டல் பண்ணிக்கோங்க, என நெட்டிசன்களுக்கு சவால் விடும் வகையில் ஏகப்பட்ட போட்டோக்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு நல்லாவே வெறுப்பேற்றி வருகின்றனர்.

வேட்டி சட்டையில்

வேட்டி சட்டையில்

முன்னதாக அனிதா, சனம் உடன் ஆரி எடுத்துக் கொண்ட ட்ரியோ போட்டோ வைரலான நிலையில், தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் தனி ஒருவனாக வேட்டி சட்டையில் செம அழகாக இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

மீட் பண்ணலாமா

மீட் பண்ணலாமா

மேலும், தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மீட் பண்ணலாமா என ஆரி கேப்ஷன் போட்டதும், அதுக்குத்தான் வெயிட்டிங் என்று ஆரியின் ஆர்மியினர் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு குவித்து வருகின்றனர். ஆரியின் ஹேட்டர்களும், நெகட்டிவ் கமெண்ட்டுகளை போட்டு ஆரியை வழக்கம் போல கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X