என்னது முதல் இலுமினாட்டியா? சும்மா மிரட்டுறாரே ஆரி.. பிக்பாஸில் வெளியான ’பகவான்’ ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: நடிகர் ஆரி அர்ஜுனனின் புதிய படமான 'பகவான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிக் பாஸ் வீட்டில் இருந்தபடியே அவரே வெளியிட்டுள்ளார்.
மாயா, நெடுஞ்சாலை என ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகர் ஆரி, இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
நேர்மையின் சிகரம் என சனம் ஷெட்டி மற்றும் ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் அவருக்கு பட்டம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் படத்தில்
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2010ம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிப்பில் வெளியான ரெட்டச்சுழி படத்தில் அறிமுகமானவர் ஆரி. அதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு வெளியான நெடுஞ்சாலை படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார்.

நயன்தாரா படத்தில்
நெடுஞ்சாலை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு 2015ல் வெளியான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் மாயா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார் ஆரி. இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான அந்த பேய் படமும் பேய் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

நேர்மையின் சிகரம்
மாயா படத்திற்கு பிறகு உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் ஆரி. ஆனால், பெரியளவில் அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆரியின் நடிப்பில் மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நேர்மையின் சிகரமாக பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.
ஆரியின் பகவான்
நடிகர் ஆரி அர்ஜுனாவின் புதிய படமான பகவான் தி ஃபர்ஸ்ட் இலுமினாட்டி என்கிற வித்தியாசமான டைட்டிலுடன் மிரட்டலான லுக்கில் ஆரி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹவுஸ்மேட்கள் முன்னிலையில் ஆரியே அறிமுகப்படுத்தியது சிறப்பு.
செம கேப்ஷன்
படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிலை செய்பவனே பகவான் என்கிற வாசகத்துடன், பகவான் தி ஃபர்ஸ்ட் இலுமினாட்டி என்கிற வித்தியாசமான கேப்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் காளிங்கன் இயக்குகிறார். பிரசன் பாலா இசை, முருகன் சரவணன் ஒளிப்பதிவு.

லாஸ்லியாவுடன்
ஏற்கனவே நடிகை லாஸ்லியா மற்றும் ஐஸ்வர்யா தத்தாவுடன் ஒரு படத்தில் ஆரி நடித்து வருகிறார். அந்த படத்தின் அப்டேட் எப்போ வரும் என தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடியோ காலில் நடிகை ஐஸ்வர்யா தத்தா கேட்டிருந்த நிலையில், தற்போது ஆரியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹீரோயின்கள் யார்? ஃபேண்டஸி திரைப்படமா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











