ஆதி – நிக்கி கல்ராணி திருமணத்தில் யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.. ஆரி அர்ஜுனன் அசத்தல் பதிவு!

சென்னை: நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended Video

Aadhi-NikkiGalrani-க்கு கோலாகலமாக திருமணம்; குவியும் ரசிகர்களின் வாழ்த்து! | Filmibeat Tamil

நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகர் வசந்த், பிக் பாஸ் அபிநய் என பல பிரபலங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆதி நிக்கி திருமணம்

ஆதி நிக்கி திருமணம்

கடந்த மே 19ம் தேதி சென்னையில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பச்சையும் தங்க நிறமும் கலந்த பட்டு உடையில் மணமக்கள் இருவரும் திருமண மேடையை அலங்கரித்தனர். நடிகர் ஆதி இந்து முறைப்படி நடிகை நிக்கி கல்ராணிக்கு தாலி கட்டினார்.

பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

ஆர்யா, சாயிஷா, நானி, சிரிஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் ஹல்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மே 19ம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பல திரை பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். ஆதி நிக்கி கல்ராணி திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை பிரபலங்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களி பதிவிட்டு வருகின்றனர்.

ஆரி பங்கேற்பு

ஆரி பங்கேற்பு

நடிகரும் பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். அங்கே அவர் எடுத்த வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரி ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் பிக் பாஸ் அபிநய் மற்றும் சென்னை 28 வசந்த் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

மணமக்களுக்கு வாழ்த்து

நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவருமே இன்று போல என்றுமே மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு ஆரி அர்ஜுனன் வாழ்த்தி உள்ளார். அவர் ஷேர் செய்த வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட பிரபலங்கள் கமெண்ட் போட்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

பாராட்டுக்கள் குவியுது

பாராட்டுக்கள் குவியுது

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் போராட்டக்காரராக நடிகர் ஆரி அர்ஜுனன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பிக் பாஸ் சீசன் 4ஐ முடித்து விட்டு வெளியே வந்தவுடன் ஆரி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு இந்த படத்தில் அருண்ராஜா காமராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த நிலையில், ஆரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X