அர்ச்சனா மகள் சொன்ன அந்த விஷயம்.. பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஆரியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டம் கோலாகலமாக களைகட்டியது. பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் பல அழகான தருணங்களை விஜய் டிவி ஏற்பாடு செய்து கொடுத்தது.
டிடி நீலகண்டன் மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்க, ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பிக் பாஸ் கொண்டாட்டம் அரங்கேறியது.
அர்ச்சனா மற்றும் அர்ச்சனாவின் மகள் சாராவின் சூப்பரான பர்பார்மன்ஸ் மற்றும் அதனை தொடர்ந்த சாராவின் பேச்சுக்கு ஆரி சொன்ன விஷயம் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது.

அன்பு தோற்காதும்மா
அன்பு தோத்துடுச்சும்மா என அழும் அர்ச்சனாவுக்கு அவரது மகள் சாரா, வெறும் 66 நாட்களில் உன் அன்பை முடிவு கட்ட முடியாதும்மா, அன்பு தோற்காதும்மா என ஒரு அழகான கனவு டிராமா மூலம் இருவரும் நடித்து அசத்தினர். அந்த நாடகத்தை அனைத்து போட்டியாளர்களும் கண்டு ரசித்தனர்.

அர்ச்சனா மகள் கோரிக்கை
அம்மாவுடன் இணைந்து அப்படியொரு பர்பார்மன்ஸை பண்ணிய மகள் சாராவை டிடி உள்பட பலரும் பாராட்டினர். பின்னர் பேசிய அவர், சோஷியல் மீடியாவில் அம்மாவை பற்றியும் மற்ற பெண் போட்டியாளர்கள் குறித்தும் ஆபாசமாக கமெண்ட் செய்தார்கள். அது ரொம்பவே ஹர்ட் பண்ணிச்சு, அதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

முகம் தெரியாதவர்கள்
சாராவின் பேச்சை பாராட்டிய தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி அப்படி கீழ்த்தரமா கமெண்ட் பண்றவங்க எல்லாம் முகம் தெரியாதவங்கம்மா, ஆனால், நீயும் உங்க அம்மாவும் எங்க இருக்கீங்க பார்த்தீங்களா என சாராவுக்கு ஊக்கம் அளித்தார். மேலும், சாராவும் மிகப்பெரிய தொகுப்பாளினியாக வளர வாழ்த்தினார்.

சாராவை பாராட்டிய ஆரி
தரம் தாழ்ந்த விமர்சனங்களிலும் எழுதியவர்களின் முகம் நிச்சயம் தெரியும். இப்படி அழகாக பேசும் சாராவின் அழகு முகத்தையும் விஜய் டிவி ரசிகர்கள் பார்ப்பார்கள். நாங்க ஏதும் சொல்லல, இந்த சின்ன பொண்ணு கேட்குறா, அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க, தரமான விமர்சனங்களை முன் வைங்க நாங்க எல்லோரும் கற்றுத் திருந்துகிறோம். தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வேண்டாம் என்று பிக் பாஸ் கொண்டாட்ட மேடையிலேயே ஆரி சொன்ன வார்த்தையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











