பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு? டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது.

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் டைட்டில் வின்னர் ஆரி முதல் ஷிவானி நாராயணன் வரை அனைவரும் இருக்கும் அழகிய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினி மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் உடன் உள்ளனர்.

ஏகப்பட்ட கொண்டாட்டம்

ஏகப்பட்ட கொண்டாட்டம்

இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஏகப்பட்ட கொண்டாட்டங்கள் தான். வீட்டிற்குள் இருக்கும் போதே ஆயுத பூஜை, விஜயதசமி, கொலு, தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் என கொண்டாடி தீர்த்தனர். தற்போது பிக் பாஸ் கொண்டாட்டமும் பக்கெட் லிஸ்டில் இணைந்துள்ளது.

பாலாவின் நண்பர்கள்

பாலாவின் நண்பர்கள்

முன்னதாக பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் வெளியாகி வைரலாகின. பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோமசேகர், சம்யுக்தா, ஆஜீத், கேபிரியல்லா என பாலாவின் குரூப் மற்றும் பாலாவின் நண்பர்கள் சூழ்ந்திருக்கும் அந்த புகைப்படம் வைரலானது.

ஆரி அனிதா சனம்

ஆரி அனிதா சனம்

மறுபுறம் ஆரி, அனிதா சம்பத் மற்றும் சனம் ஷெட்டி மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒட்டுமொத்த பேரும் கலந்து கொண்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அரங்கை அதிர வைத்துள்ள நிகழ்ச்சி கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஷிவானியும் ஆஜர்

ஷிவானியும் ஆஜர்

பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோமசேகர், சம்யுக்தா, ஆஜீத், கேபிரியல்லா என அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள், ஷிவானி பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வில்லையா? அப்படி கலந்து கொண்டிருந்தால் ஏன் பாலாவுடன் நின்று போட்டோ எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ஷிவானியும் அந்த கொண்டாட்டத்தில் ஆஜர் ஆகி உள்ளார்.

ஆரி டு டிடி

ஆரி டு டிடி

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தி, நிஷா, ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், அனிதா சம்பத், சம்யுக்தா, சோமசேகர், ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ரேகா, ரம்யா பாண்டியன், ஆஜீத், கேபிரியல்லா என அனைவரும் ஒட்டுமொத்தமாக இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. இவர்களுடன் விஜய் டிவியின் தொகுப்பாளர்களான டிடி மற்றும் மாகாபா ஆனந்தும் இடம்பெற்றுள்ளனர்.

சனமை காணோம்

சனமை காணோம்

பாலாஜி முருகதாஸ் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தில் ஷிவானி நாராயணனை காணோம் என ரசிகர்கள் தேடிய நிலையில், தற்போது ஒட்டுமொத்த குரூப்பும் இருக்கும் இந்த புகைப்படத்தில் சனம் ஷெட்டி மற்றும் சுசித்ரா மிஸ்சிங் என பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அர்ச்சனா பக்கத்தில் கூட சனம் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால், நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சுசித்ரா இல்லை

சுசித்ரா இல்லை

கிராண்ட் ஃபினாலேவில் கமல்ஹாசன் வழங்கிய கதர் ஆடை குறித்தும், கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணது குறித்தும் தவறாக கருத்து வெளியிட்ட சுசித்ரா இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. எந்தவொரு போட்டோவிலும் சுசித்ராவை காணவே இல்லை. ஒருவேளை அழைப்பு விடுத்திருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

கடைசியில் பாலா

கடைசியில் பாலா

டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் நடுநாயகமாக உட்கார்ந்து இருக்கும் நிலையில், அவருக்கு அருகே இருக்க வேண்டிய பாலாஜி முருகதாஸ், கடைசி வரையில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். ஷிவானியின் அருகில் கூட நிற்காமல் இருக்கிறாரே, இன்னுமா இருவருக்கும் இடையே பிரச்சனை தீரவில்லை என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X