பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம்.. ஆரி ஆவேசம்!
சென்னை: பிக் பாஸ் 4வது சீசன் வின்னரும் நடிகருமான ஆரி அர்ஜுனன் PSBB விவகாரம் குறித்து ஆவேசமாக பதிவிட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்தது அம்பலம் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்திய போலீசார், ராஜகோபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆபாச லீலைகள்
கடந்த ஓராண்டாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் இயங்காத இந்த நிலையிலும், ஆன்லைன் வகுப்புகளிலேயே தனது பாலியல் லீலைகளை கட்டவிழ்த்துள்ளார் ஆசிரியர் ராஜகோபாலன். ஆன்லைன் வகுப்புக்கு அரை நிர்வாண கோலத்தில் வருவது, மாணவிகளுக்கு தனியாக ஆபாச மெசேஜ்கள் அனுப்புவது, மற்றும் தியேட்டருக்கு வரும்படியும் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படியும் மிரட்டி உள்ளார்.

வெடித்து சிதறிய மாணவிகள்
ஆசிரியர் ராஜகோபாலனின் இந்த அட்டகாசத்தை பொறுக்க முடியாத சில மாணவிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவியும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான ஒரு மாணவிக்கு தாங்கள் அனுபவித்த தொல்லைகளை வெளிப்படுத்த PSBB பள்ளி விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர் கைது
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிய நிலையில், ராஜகோபாலனை கைது செய்த போலீசார் அவரது மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை சோதனை செய்துள்ளனர். மேலும், ராஜகோபாலன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் வேறு சில ஆசிரியர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ராஜகோபாலனை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரியுள்ள நிலையில், அவரி

ஆரி ஆவேசம்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டில் வின்னருமான ஆரி ஆவேசமாக பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில் இது போன்ற கயவர்களை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் என கொதித்துள்ளார்.

சூரசம்ஹாரம் செய்வோம்
"ஆசிரியர் போர்வையில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம். ராஜகோபாலன் போன்றோருக்கு சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை இது போன்றோருக்கு பாடமாக இருக்கட்டும்." என ஆசிரியர் ராஜகோபாலனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்கிற தனது கருத்தை நடிகர் ஆரி முன் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











