சூப்பர் ஹீரோ ஆரி.. மின்னல் வேகத்துல போறாரே.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் பாடல் ரிலீஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ள நடிகர் ஆரி அர்ஜுனா நடிப்பில் உருவாகி உள்ள எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் சூப்பர் ஹீரோ வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

நெடுஞ்சாலை, மாயா என பல படங்களில் சிறப்பாக நடித்து வந்த நடிகர் ஆரி, இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டார்.

நாளை நடைபெறவுள்ள கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் ஆரிக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நாயகன்

மக்கள் நாயகன்

பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்ட ஆரி அர்ஜுனனை சக ஹவுஸ்மேட்கள் வெறுத்து ஒதுக்கிய நிலையில், ஒவ்வொருத்தரும் என்ன பண்றீங்கனு நெத்தியில அடிச்ச மாதிரி சொல்லுவேன் என எரிமலையாக வெடித்து சிதறிய ஆரி, அதன் பின்னர், எத்தனை முறை சக ஹவுஸ்மேட்களால் நாமினேட் செய்யப்பட்டாலும் மக்கள் சக்தியால் அதிக ஓட்டுக்கள் பெற்று பிக் பாஸ் நாயகன் ஆனார்.

கோடிக் கணக்கில் ஓட்டுக்கள்

கோடிக் கணக்கில் ஓட்டுக்கள்

மற்ற போட்டியாளர்களுக்கு லட்சக் கணக்கில் ஓட்டுக்கள் குவிந்தால், ஆரிக்கு கோடிக் கணக்கில் ஓட்டுக்கள் குவிவதாக ஏகப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒவ்வொரு வாரமும் முதல் ஆளாக ஆரி சேவ் ஆனது அதை நிரூபிக்கும் விதமாகவே மாறியது குறிப்பிடத்தக்கது.

பட புரமோஷன்

பட புரமோஷன்

ஆரியின் பிக் பாஸ் புகழை பயன்படுத்திக் கொள்ள இதுதான் சரியான சமயம் என நினைத்து, அவரை வைத்து படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும், சமூக வலைதளங்களில் அவர் நடித்த படங்களின் புரமோஷன்களை செய்து வருகின்றனர்.

பகவான் மோஷன் போஸ்டர்

பகவான் மோஷன் போஸ்டர்

படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிலை செய்பவனே பகவான் என்கிற வாசகத்துடன், பகவான் தி ஃபர்ஸ்ட் இலுமினாட்டி என்கிற வித்தியாசமான டைட்டிலுடன் உருவாக்கப்பட்டு வரும் பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிக் பாஸ் வீட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த படத்தை இயக்கி வரும் இயக்குநர் காளிங்கன் ஆரி பற்றி பேட்டிகளும் கொடுத்தார்.

அலேகா டிரைலர்

அலேகா டிரைலர்

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஆரி அர்ஜுனன் நடிப்பில் உருவாகி உள்ள் அலேகா படத்தின் டிரைலரும் சமீபத்தில் ரிலீசானது. சமூக வலைதளங்களில் ஆரிக்கு இருக்கும் கிரேஸ் அந்த டிரைலரையும் வேற லெவலில் ஹிட் செய்தது.

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

இந்நிலையில், அடுத்ததாக ஆரி நடிப்பில் உருவாகி உள்ள எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் சூப்பர் ஹீரோ பாடல் வீடியோ இன்று ரிலீஸ் செய்யபட்டுள்ளது. இயக்குநர் கவிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படமும் சீக்கிரமே ரிலீசாகும் என தெரிகிறது.

ஆரியா? ஆஜித்தா?

ஆரியா? ஆஜித்தா?

தற்போது வெளியாகி உள்ள சூப்பர் ஹீரோ வீடியோ பாடலில் ஆரியை பார்த்த ரசிகர்கள், இது ஆரியா? இல்லை ஆஜித்தா? என்று கேட்கும் அளவுக்கு செம ஸ்லிம்மாக இருக்கிறார் ஆரி. எந்த வருஷத்துல எடுத்த படம் இது என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மினி பட்ஜெட் ஃபிளாஷ்

மினி பட்ஜெட் ஃபிளாஷ்

ஹாலிவுட் படமான ஃபிளாஷ் படத்தில் நாயகனுக்கு மின்னல் வேகத்தில் எங்கும் செல்லக் கூடிய சக்தி இருக்கும். இந்த பாடல் வீடியோவிலும் ஆரி மின்னல் வேகத்தில் ஏகப்பட்ட ஆபத்துக்களை தடுப்பது போல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. ரொம்பவே மினி பட்ஜெட் படமாக இருக்கும் போல, ஒரு ஆல்பம் பாடல் பார்த்த எஃபெக்ட் கூட இல்லை. ஏதோ ஒரு ஷார்ட் ஃபிலிம் ஃபீலிங் தான் வருகிறது.

வீணடிக்கக் கூடாது

வீணடிக்கக் கூடாது

நடிகர் ஆரி அர்ஜுனனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்துள்ள இந்த புகழையும் மக்கள் அன்பையும் கெடுத்துக் கொள்ளும் விதமாக சுமாரான படங்களில் நடித்து கிடைத்திருக்கும் வாய்ப்பை வீணடித்து விடாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை காட்டி புகழை தக்க வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X