கேஜிஎஃப் மோடுக்கு மாறிய ஆரி.. வைரலாகும் வீடியோ!

சென்னை : திரைப்படங்களில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல சமூக சேவைகளை செய்து வருபவர் நடிகர் ஆரி அர்ஜுனன்.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதுக்குப்பிறகு படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வரும் ஆரி அர்ஜுனன் இப்பொழுது கேஜிஎஃப் மோடுக்கு மாறிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களால் கொண்டாட பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில்

தமிழ் சினிமாவில்


2005ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற ஆடும் கூத்து படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் ஆரி அதைத்தொடர்ந்து ரெட்டை சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

வரலாறு காணாத வெற்றி

வரலாறு காணாத வெற்றி

சினிமாவில் மற்றும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சமூக அக்கறை கொண்ட பல செயல்களை செய்தும் இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆரி பிக்பாஸ் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடினார். எந்த சூழ்நிலையிலும் எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திற்காகவும் மற்றவர்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்ளாமல் நேர்மையாக விளையாடிய ஆரியை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி உலகம் முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்று வரலாறு காணாத வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லாஸ்லியாவுடன் ஜோடியாக

லாஸ்லியாவுடன் ஜோடியாக

பிக் பாஸுக்கு பிறகு பலராலும் அறியப்பட்ட ஆரி அர்ஜுனன் இயக்குனர் அபின் இயக்கத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதை தொடர்ந்து லாஸ்லியாவுடன் ஜோடியாக மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான், அலேகா மற்றும் பகவான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. இதில் பகவான் தமிழ் சினிமாவில் வெளியாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஜிஃஎப் மோடுக்கு

கேஜிஃஎப் மோடுக்கு

சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடும் ஆரி இப்பொழுது கேஜிஃஎப் மோடுக்கு மாறியுள்ள வீடியோ அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது. அதில் கே ஜி எஃப் தீம் மியூசிக்கு கேஜிஃஎப் மோடுக்கு தலையசைத்த படியே சிரித்துக்கொண்டு மாஸாக சல்யூட் வைக்க லட்சக்கணக்கான லைக்குகள் குவிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X