Just In
- 1 hr ago
முதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்!
- 1 hr ago
கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!
- 2 hrs ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 2 hrs ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
Don't Miss!
- News
எல்லைகளை போலவே தகவல்களும் முக்கியம்.. சைபர் தாக்குதலால் நாட்டையே அழிக்க முடியும்..ராணுவ தளபதி பேச்சு
- Finance
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? வரவிருக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா?
- Sports
என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்!
- Automobiles
மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேபியை காப்பாற்ற துடிக்கும் அர்ச்சனா.. கிச்சன் டீம் கேப்டன் பதவி.. பாலாவுக்கு புரிய வைத்த ஆரி!
சென்னை: அர்ச்சனாவின் அன்பு வலையில் விழுந்து விட வேண்டாம் என பாலாவுக்கு அழகாக புரிய வைத்துள்ளார் ஆரி.

ரம்யா பாண்டியன் தலைவர் ஆன பிறகு டீம் பிரிப்பதில், கிச்சன் டீமுக்கு அர்ச்சனாவை கேப்டனாக நியமித்து ஆட்களை சேர்க்க சொன்னார்.
ஆரி தான் வருகிறேன் என்றதும், வேண்டாம் என கேபியை எடுத்துக் கொண்டார் அர்ச்சனா.
பெரிய மிஸ்டேக் பண்ண பாலா.. கேப்டன் ஆக்கிய பிக் பாஸ்.. கடைசியில செம ட்விஸ்ட்.. உண்மை வெல்லும்!

இரண்டாவது முறையாக
ரியோவுக்கு அடுத்து இந்த சீசனில் இரண்டாவது முறையாக ரம்யா பாண்டியனுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது. முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் பந்தே கிடைக்காத ரம்யாவை கேப்டனாக்கி அழகு பார்த்தார் பிக் பாஸ். இந்த முறை போராடி ஜெயித்து, கடைசியில் செம ட்விஸ்ட்டாகி கேப்டன் பதவியை பெற்றுள்ளார்.

அர்ச்சனா கேப்டன்
கிச்சன் டீமுக்கு கேப்டனாக அர்ச்சனாவை நியமித்து அழைத்த ரம்யா பாண்டியன். உங்க டீமுக்கு யாரெல்லாம் வேண்டுமோ, விருப்பப்படுபவர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார். அர்ச்சனா கேட்டதும் ஆரி கை தூக்கினார். ஆனால், நீங்க 2 வாரம் வேலை செஞ்சிட்டீங்க என்று அவரை அர்ச்சனா ஒதுக்கி விட்டார்.

நான் வரேன்
ஆனால், மூன்று வாரம் கிச்சன் டீமில் இருந்த கேபி, நான் வரேன் என்று அடம்பிடித்த போது, அர்ச்சனா அவரை தடுக்காமல் ஏற்றுக் கொண்டார். கேபியை கிச்சன் டீமுக்கு கொண்டு வரத்தான் ஆரியை வேண்டாம் என அர்ச்சனா தடுத்ததாக பாலா மற்றும் அனிதாவிடம் பேசும் போது ஆரி விளக்கினார்.

கிச்சன் டீமில் பாலா
கேபியை தொடர்ந்து, பாலாவும் கிச்சன் டீமுக்கு வரேன் என அன்பு கேங்கில் ஒட்டுமொத்தமாக ஐக்கியமாக நினைத்து விட்டார். ஆனால், அதனை தடுப்பதற்காக, தம்பி, அங்க நடந்தது பக்கா ஃபேவரிஸம்.. அர்ச்சனா கேபியை அடுத்த வாரமும் எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற பண்ண டிராமா என தெளிவாக விளக்கினார். அர்ச்சனாவை கேப்டனாக ரம்யா நியமித்த நிலையில், கேபியை கிச்சன் டீம் கேப்டனாக ஆக்கி விட்டார் அர்ச்சனா.

வெளியேற விரும்பும் பாலா
ஆரி விளக்கி சொன்னதும் புரிந்து கொண்ட பாலா, கிச்சன் டீமில் ஒட்டுமொத்தமாக அர்ச்சனா கேங் தான் இருக்கு என்பதை தெரிந்து தெளிந்து கொண்டார். இதுவரை கேங்கில் சேராத நாம், இனியும் கேங்கில் சேர்ந்தால் நல்லா இருக்காது என்று நினைத்து, கிச்சன் டீமில் இருந்து வெளியேற போகிறேன் என்று கூறிவிட்டார்.

செம சூழ்ச்சி
இந்த சீசனில் பிக் பாஸுக்கு மேல பெரிய பாஸாக அர்ச்சனா அக்கா வேற ஒரு செம சூழ்ச்சி கேம் ஆடி வருகிறார் என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் அது நன்றாகவே புரிந்துள்ளது. எந்த வேலையையும் செய்யாமல் இருக்கும் கேபியை, (அவரே ஒப்புக் கொண்டார்) அடுத்த வாரமும் காப்பாற்ற துடிக்கிறார் அர்ச்சனா. நாளை என்ன ஆகுமோ? வெயிட் பண்ணி பார்ப்போம்.